உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/72

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

73

விடாமல், பெரியாரென்றும் அறிஞர் என்றும் சொல்லிக் கொண்டால் போதுமா? அவர்களுக்கு இத்தகையவீரம் வர வேண்டாமா!! என்று கேட்டிருக்கிறார்! அருமை, அருமை!! அமைச்சர் பெருமானே! உமது அறிவின் முதிர்ச்சி இருக் கிறதே, அருமையினும் அருமை!! ராஜா சிதம்பரத்தைப் பிடித்துக்கொண்ட வீரம் எமக்கும் பிடிக்கவேண்டும் என் கிறீர்; எவ்வளவு அழகாக, வட்ட வடிவமாக, வெண்ணிலவு போல உடலெங்கும் காட்சி அளிக்கிறது, என்று குஷ்ட நோயாளியைப் பாராட்டிவிட்டு, அதுபோல உமக்கும் வரலா காதா என்று வேறு கூறுவதுபோல இருக்கிறது,உமதுபேச்சு. - என்றெல்லாம் கூறத் தோன்றவில்லை, தம்பி! எனக்கு. நான் முறுக்குத் தளராத வாலிபனாக இருந்தபோது கேள்விப் பட நேரிட்ட ஒரு கதை- நிஜச்சம்பவம்-நினைவிற்கு வந்தது. மணி பத்தாகும்-பாவை பாகு கனிமொழி தருவாள், பாலில் சீனியும் சேர்த்துத் தருவாள்-பருகுவான், என் நண்பன். எனினும் அவன் நினைவு பத்மாவின் பஞ்சணை மீதிருக்கும் - பத்மா அவன் மாதவி, அவன் கண்ணகியின் பெயர் குணவதி, அவனுக்குப் பெயரோ அன்பரசன்! கொட் டாவி விடுவான். கோகிலம், அவன் குறிப்பறிந்து வெற்றிலை மடித்தளிப்பாள்! குதப்பிவிட்டு, கடைவீதி சென்று நொடியில் வருகிறேன் - ஒரு கப் சாயா சாப்பிட்டுவிட்டு என்பான்! குணவதி, இதற்கு ஏன் வெளியே போக வேண்டும், இதோ நொடியில் நான் தயார் செய்கிறேன், என்பாள். செச்சே! காலை ஆறு முதல் இரவு பத்துவரை தான் வேலைசெய்து அலுத்துக் கிடக்கிறாயே, இனியும் உனக்கேன் சிரமம், இதோ ஒரு அரைமணி நேரம் வந்து விடுகிறேன், என்றுகூறுவான். பத்மா அழைக்கிறாள் அவன் என்ன செய்வான்! சீக்கிரம் என்பாள், குணவதி கொஞ்சுமொழியில்! 'இதோ' என்பான், அவனும் கொஞ்சுவதுபோல; எதற்கும் கதவைத் தாளிட் டுவை, என்று கூறிவிட்டு, கோடிவீதிக்கு, ஓட்டம் பெருநடை யாகச் செல்லுவான். சாயாக் கடை திறந்திருக்கும், அங்கு அவன் செல்லான். நில்லான், நேரே அங்கு!! கதவு தாளிட்டிருக்கும், இடுக்கின் வழியாகப் பார்த்தால் விளக்கொளி மினுக்கிடும். மெள்ளத் தட்டுவான், "பத்மா! பத்மா!" பத்மா படுக்கையில் - தூக்கமல்ல. கோபம்! கதவு தட்டுவான், அவள் கண் மூடுவாள்! இதழில் புன்னகை இருந்திடும்!! 51