உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/75

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76

76 எதிர்ப்பிரசாரம் செய்யக்கூடாது? இதைவிட வேறு என்ன வேலை இவர்களுக்கு? இதையும் செய்ய முடியவில்லையானால், இவர்களுக்கென்ன பட்டம், பதவி! என்று மேலிடம் இடிக் கும்போலத் தெரிகிறது - அந்த இடி தாங்காமல், இப்போது கனம்கள் 'வடநாடு, தென்னாடு பேதம் பேதமை, அதைப் போக்குவதே எமது கடமை என்று பேச ஆரம்பித்துள்ளனர். "புது டில்லியில் இருந்துகொண்டு மத்ய சர்க்கார் ஆட்சி செய்து வருகிறது. ஆகையால் தென்னாடு முற்றி லும் புறக்கணிக்கப்படுகிறது என்று தென்னாட்டில் பலத்த சந்தேகத்தைப் பலர் கிளப்பி வருகின்றனர். இதில் என்ன விசேஷமென்றால், சமீபகாலத்தில் நன்கு படித்தவர்கள்கூட இந்தப் பிரசாரத்தினால் ஓரளவு பாதிக்கப் பட்டிருப்பதாகத் தெரிகிறது." அழகேசனார் திருவாய் மலர்ந்தருளுகிறார் இதுபோல, குடந்தையில் இந்தத் திங்களில்-தமது திக்விஜயத்தின்போது. - மன்னிக்க வேண்டுகிறேன் - தீர்த்த யாத்திரையின்போது!! பலத்த சந்தேம் பரவி இருக்கிறது. தன்கு படித்தவர்கள்கூட இந்தப் பிரசாரத்தால் பாதிக்கப் பட்டிருக்கிறார்கள். தெரிகிறதா நிலைமை!! இந்தப் பிரசாரம் பரவாது 'பிசுபிசுத்து' விடும் என்று எண்ணிக் கொண்டிருந்தோம், இப்போது பார்த்தாலோ, இது பரவிக்கிடக்கிறது. நன்றாகப் படித்தவர்கள்கூட இதைஒப்புக் கொண்டு பேசுகிறார்கள் - என்பது அழகேசனாரின் கருத் துரை. அம்மி நகருகிறது என்று பொருள்!! பாடுபட்டு வரு கிறோம் பலன் தெரியத் தொடங்கிவிட்டது! அமைச்சர்கள் (ஜல்லடம்' கட்டுகிறார்கள் - அவர்களை அந்த நிலைமைக்குக் கொண்டு வந்து விட்டிருக்கிறது, நமது பிரச்சாரம்!! என்னதான் சமாதானம் சொல்லுங்கள், வடநாடுதான் ஆதிக்கம் செலுத்துகிறது. இந்திய அரசியல் சட்ட திட்டமே வடநாட்டு ஆதிக்கத் துக்கு வழிவகுப்பதாகத்தானே அமைந்திருக்கிறது. ஐந்தாண்டு திட்டத்தின் புள்ளிவிரம் கூறும் கதையைப் பார்த்தால், நன்றாகத் தெரிகிறதே தென்னாடு புறக்கணிக்கப்படுவது. இவ்விதமெல்லாம் படித்தவர்கள், அழகேசனார் காதுபடச் சொல்லியிருக்கிறார்கள் போலிருக்கிறது. இவர்களுக்கு மறுப் புரை, தெளிவுரைகூற முடியாமல் திண்டாடி இருக்கிறார் என் றும் தெரிகிறது -எனவேதான் திடுக்கிட்டுப்போன நிலையில் பேசுகிறார் திருவாளர் அழகேசனார், நன்றாப் படித்தவர்