உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

82

82 பர்மாவிலிருந்து தேக்கு முதலிய பண்டங்கள் இங்குவரும். மொத்தத்தில், தென்னாட்டவருக்கு வசதியானது இந்தக் கப்பல் போக்குவரத்து. நஷ்டம் என்று காரணம் காட்டியும், கப்பல் பழசு பழு தாகிவிட்டது, புதுப்பிக்கப் பெரும் பொருள்' செலவாகும், என்று கூறியும், சிந்தியா இந்போது இந்தக் கப்பலை நிறுத்தி விட்டது. ஏழைக்கு இடி! சென்னை -ரங்கூன் வியாபாரத் தொடர் புக்குத் தாக்குதல் - கண்டனம் கிளம்பி இருக்கிறது. இனி, சென்னையிலிருந்து கல்கத்தாவுக்குக் கப்பலில் சென்று, அங்கிருந்து பர்மாவுக்குக் கப்பல் தேட வேண்டும். அந்தக் கப்பலில், ஏழைகளுக்கான 'மேல் தட்டு' பிர யாணவசதி மலிவான கட்டண வசதி- அதிகம் கிடையாது. இப்போது செலவாவது போல இரட்டிப்புச் செலவாகும். பண்டங்களை அனுப்புவதிலும், பாரம் ஏறும். பாரம் ஏறினால், வடக்கே வங்கம், வங்கத்துக்கு அருகே உள்ள இடங்களிலிருந்து கிளம்பும்சரக்குடன், தென் னகத்துச் சரக்கு போட்டியிட்டுச் சமாளிக்க முடியாது. இவ்வளவு இன்னல் இருக்கிறது! ஏன் என்று கேட்க வோ, சிந்தியா போனால் என்ன, இதோ ஒரு விந்தியா என்று கூறிக் காரியமாற்றவோ, சென்னையால் முடியாது! டில்லி கண் திறக்க வேண்டும்! நஷ்டஈடு தந்து சிந்தியாவைத் தொடர்ந்து கப்பலை நடத்தச் சொல்லலாம். புதிதாகக் கப்பல் உதவலாம், அல்லது பழுது பார்க்க வசதி செய்து தரலாம். எதையாவது இந்திய சர்க்கார் செய்ய வேண்டும். தினமணியின் அழுகுரல் கேட்கிறது, இது போல, ஜூன் 23-ல். ஏன் சிதம்பரனாரின் கண்ணீரும் செந்நீரும் சிந்திப் புனித புரியாக்கப்பட்டுள்ள தென்னகத்துக்கு, அந்த அவல நிலை, என்று நாம் கேட்கிறோம்? வடநாடு தென்னாட்டை அடிமைப்படுத்திற்றா? யார் சொன்னது? இதோ என்னைப் பாருங்கள், என்று கேட்கிறார். அமைச்சர் சுப்பிரமணியனார், போர்க்கிறேன்! பெருமூச்சு எறிகிறேன்! பாவியேன் இந்தப் 'பரிசு' கிடைக்குமா கிடைக்குமா என்று ஏங்கித் தவிக்கி றேன்! கனமாகும் காலத்தை, கடவுளே! சீக்கிரம் தாருமே' என்று மலைபோன்ற உடலை வில்போல வளைத்தபடி, வரம் கேட்கிறார், வாங்கிய கடனைத் திருப்பித் தராமல் இன்சால் வென்ட்' போட்டிடும் போக்கில், தேர்தலின்போது மக்க ளிடம் அளித்திட்ட வாக்குறுதியைக் காற்றிலே பறக்கவிட்டு