உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 1.pdf/97

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

98

98 கொள்வார்கள், பிழைத்துப் போவார்கள் என்று கூறிவிடு கிறார். பம்பாய் மாகாணக் காங்கிரஸ் கமிட்டித் தலைவர் படீல், கிழக்கு ஆப்பிரிக்கா சென்று, அங்கு வாழும் இந்தியர்களிடம் பல இலட்ச ரூபாய் வசூல் செய்து கொண்டு வந்திருக்கிறார்- இந்த பவனம் அமைக்கும் செயலில் ஈடுபட்டிருக்கிறார். இலட்சக் கணக்கிலே பணம் தந்து,பட்டீலை மகிழ்விக்கச் செய்ய முடிகிறது, வடவரால். கண்ணீரைத்தான் காண்கிறோம் இலங்கையில் இடர்ப் படும் திராவிடரிடம்--அதைக் காண வெட்கமும் வேதனையும் அடைகிறோம். அவர்களுக்கென்று இங்கோர் தாயகம் இருக்கிறது. எல்லா வளமும் கொஞ்சும் நாடு. எனினும்,அவர்களுக்கு இங்கு ஒரு கவளம் சோறு இல்லை. அவர்கள் படும் அவதியைத் துடைத்திடும் ஆற்றல் படைத்த ஒரு சர்ககார் இல்லை. அவர்கள் சொந்த நாட்டிற்கே அகதிகளாக வந்து சேரும் போது, விதவை மகளைக் கட்டித் தழுவி விம்மிடும் நலிவுற்ற தாய் போலாகிறது நாடு. வாழ்கிறார்கள் வளமாக வெளி நாடுகளிலேயும், வடவர்; அந்த வசீகரத்தின் மெருகு கெடாதிருக்கச் செய்வதற்காக பம்பாயில் பவனம் கட்டுகிறார் படீல். "தாராவி எங்கே இருக்கிறது?- என்று நான் கேட்டேன் - என்னை அழைத்துச் சென்ற பெரியாரிடம். பம்பாய் சுயமரியாதை இயக்கத் தோழர்களின் அழைப்பின் பேரில் அங்கு போயிருந்தோம். "தாராவியா?..." என்று கேட்டபடி, இப்புறமும் அப் புறமும் பார்த்தார் அவருடைய நாசி விரிந்தது, குவிந்தது.- என்ன இது என்று நான் கூர்ந்து கவனித்தேன். "இதோ அருகாமையில் தான் தாராவி-நாற்றமடிக்கிறதே, தெரிய வில்லையா?" என்று கேட்டார் - கேட்டுவிட்டு விளக்கமளித் தார். தோல் பதனிடுகிறார்கள், அந்தத் துர்நாற்றம் அடிக் கிறது இப்படிப்பட்ட இடம்தானே நம் மக்களுக்குக் கிடைத் திருக்கும், அதனால் தான தாராவி அருகாமையில் இருக்கிறது என்று கூறினேன் என்றார். உண்மையாகவே, தாராவியை நெருங்கிக் கொண்டிருந்தோம். திராவிடர் வடநாடு ஆனாலும் இலங்கையானாலும், சென்று வாழ்கின்றார்கள் என்பதல்ல பொருள், வதைபடு கிறார்கள்.