உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/142

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

134

வில் ஒன்பதாம் நம்பர் கடையில் அறுபது மூட்டை சீனியை ஒளித்து வைத்திருக்கிறான் கங்காதரன் என்ற தகவலைச் சேகரித்துக்கொண்டு வந்து தருவார்களா!

உண்மைச் சாது இந்த உலக விவகாரத்தில் தன்னைச் சிக்கவைத்துக் கொள்ளமாட்டார்.

சிக்கவைத்துக்கொண்டு சீர்செய்வேன் என்று செப்பிடும் சாது உண்மைச் சாதுவாக இருந்திட இயலாது.

என்றாலும், குல்ஜாரிலால் நந்தா மெத்த நம்புகிறார், சாதுக்கள் படை திரண்டால் சகல கேடுகளும் ஒழிந்திடும் என்று அவ்வளவு நம்பிக்கை துளசியின் மகிமையில்! வீசுகிறார் பகைவன் நுழைந்திடும் பாதையில்.

தம்பி! உங்கள் அண்ணாதுரைக்குச் சாது சன்னியாசிகள் என்றாலே பிடிக்காது, அதனால் இதுபோலக் கூறுகிறான் என்பர் சிலர்.

நான் கூறியிருப்பதைவிட வேகமாக, வெளிப்படையாக, சாதுக்களைப் படைதிரட்டும் ஏற்பாட்டினைக் கண்டித்துச் சிந்தனையைத் தூண்டிச் செம்மைப்படுத்தத்தக்க சீரிய முறையில் இந்தக் கிழமை இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழில், நயனதாரா சாகால் என்பார் ஒரு கட்டுரை வெளியிட்டுள்ளார்.

திருமதி விஜயலட்சுமி பண்டிட் திருமகளார் ஒருவருக்கு நயனதாரா என்று பெயர்; கட்டுரையாளர் அவர்கள் தான் என்று எண்ணுகிறேன்.

துணிவும் தெளிவும் துள்ளுகிறது நயனதாராவின் கட்டுரையில்! இடித்துரைக்க ஏளனத்தையே கருவியாக்கிக் கொண்டுள்ளார். இலட்சிய மணமும் கமழ்கிறது கட்டுரையில்; புத்துலகம் காணவேண்டும் என்ற துடிப்பு பளிச்சிடுகிறது.

எந்த நவயுக உலகில் ஓரிடம் பெற நாம் போராடிக்கொண்டு வந்தோமோ, அந்த உலகு வேகமாக, வண்ணம் மிகக்கொண்டதாக மாறிக்கொண்டிருக்கிறது—ஜெட்விமான வேகத்தில் செல்கிறது. வேறெந்தக் காலத்தைக் காட்டிலும் நன்மை மிக அதிகமாக அறைகூவி அழைத்திடும் இந்தக் காலத்-