உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/151

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

143

வெற்றி கிட்டியதா என்றுதானே கேட்க விரும்புகிறாய் தம்பி! எப்படிக் கிட்டும்! அக்கிரமக்காரன் தான் கண்ணீர் கண்டு கலங்கமாட்டானே! இதயம் இருந்தால் தானே, இளக! உள்ளம் உறங்காதிருந்தால்தானே, உருக!! சவனரோலாவின் படை, பார்ப்போருக்கு இரக்க உணர்ச்சியை மட்டும் தந்திட உதவிற்று. சமூகக் கேடுகள் ஒழிந்து பட உதவவில்லை.

நந்தா உருகுகிறார், உள்ளம் துடிக்கிறது. ஊழல் மலிந்து கிடப்பது கண்டு; ஆனால், அதனை ஒழித்திட அவர் மேற்கொள்ளும் முறை, எனக்குத் தம்பி! துளசியைப் பகைவன் நுழையும் வழியிலே வீசிவைத்த மன்னனையும், மாபாவிகளைத் திருத்த மாரடித்தழுதிடும் படையைத் திரட்டிய சவனரோலாவையுந்தான் நினைவிற்குக் கொண்டு வருகிறது. நான் கூற எண்ணிய கருத்துக்களை நயனதாரா என்பவர், எனக்கு ஏற்படக்கூடியதைவிட அதிகத் துணிவுடனும் தெளிவுடனும் எடுத்துரைத்தார்—நான் அதனை எடுத்துரைத்தேன்.

சாதுக்களை, தம்பி! நந்தா மனிதப் பிறவியிலிருந்து மாறுபட்டவர்கள் என்று எண்ணுகிறாரோ, அல்லது மேம்பட்டவர்கள் என்று கருதுகிறாரோ எனக்குத் தெரியவில்லை.

சாதுக்களின் இயல்பும் நடவடிக்கையும், நிலையும் நினைப்பும் எப்படி உளது என்பதைக் கண்டறிந்து உண்மையை உணர்ந்திடத்தக்க விதமாக, நந்தாவுக்கு சாதுக் கூட்டத்திடம் எத்தனை எத்தனை ஆண்டுகளாக நெருங்கிய நேசமிகு தொடர்பு உளதோ அதனையும் நானறியேன்.

ஆனால் ஆண்டு பல, சாது சன்னியாசிகளிடம் நெருங்கிய தொடர்புகொண்டு, தூய்மையைத் தேடிய, ஒருவர்—சாதுக்கள் குறித்துக் கண்டறிந்து கூறினது பற்றி முன்னம் நான் படித்திருக்கிறேன்.

சாது சன்னியாசிகள் என்றாலே கட்டோடு பிடிக்காதவரின் கருத்து அல்ல.

மதம் பொய், பூஜாரிகள் புரட்டர்கள் என்று எண்ணிடும் வழி தவறியவர்களின் வார்த்தை அல்ல. சீலம் பெறவேண்டும், அதனைப் பெற்றிட ஏற்ற இடம் சாது