147
கண்டார், வெற்றி எந்த அளவு பெற்றார்! கரிக்கட்டையைக் கொண்டு உடலழுக்கைப் போக்கிட முனைகின்றாரே!! முறையா?
என்று எழுதுகிறார் மீராபென்; நந்தா மட்டும் துளியும் சந்தேகப்படவில்லை, சஞ்சலப்படவில்லை, சாதுக்கள் படை திரட்டிப் புனிதப் போர் நடத்தி வெற்றி காணலாம் என்று எண்ணுகிறார்!
இந்தப் படை கொண்டு எந்தப் புனிதத்தைக் காண்பாரோ நானறியேன்; ஒன்று மட்டும் புரிகிறது தம்பி! நந்தா உலவிடும் காங்கிரஸ் வட்டாரத்திலேயே, நகைத்துப் பேசிடும் விஷயமாகிவிட்டது இவர் சாதுக்களைப் படை திரட்டிடும் செயல்.
என்றாலும் அவர் அமைச்சர்-படை அமைக்கிறார்.
துளசியை வீசினானாமே மன்னன்! தடுத்திட முடிந்ததா, கேட்டிடும் துணிவு பிறந்ததா!
எனவேதான், தம்பி! நந்தாவின் இந்த முயற்சியைத் துணிவுடன் கண்டித்து எழுதிய நயனதாராவின் கட்டுரையைக் கண்டு, வியந்து பாராட்டினேன்—உன்னிடமும் கூறினேன்,
13-9-64
அண்ணன்,
அண்ணாதுரை