இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
காஞ்சிக் கடிதம் : 10
டில்லிக் கடிதம்
பத்திரிகை நிருபர்கள் மாநாடு: வினா—விடை
இந்தியை ஆட்சி மொழி ஆக்குவதையும் பரப்புவதையும் ஆட்சியாளர் விட்டுவிட வேண்டும்.
பக்தவத்சலனாரின் வேடிக்கைப் பேச்சு
எங்களுக்கு எந்த மொழி மீதும் வெறுப்பு இல்லை
பதினான்கு தேசிய மொழிகளும் ஆட்சி மொழிகளாக வேண்டும்.
தொடர்பு மொழியாகத் தமிழ் இருக்கலாம்.
துக்க நாளில் வன்முறை எழக் காரணமாய் இருந்தவர்கள் காங்கிரஸ் தலைவர்களே.
இலால்பகதூரின் பேரப் பிள்ளை ஆங்கிலமொழி மூலம் கல்வி கற்பதாகக் கேள்வி.
தம்பி,
நாவலர் நெடுஞ்செழியன் அவர்களிடம் தொலைபேசி மூலம் பேசி முடித்தவுடன் எழுதுகிறேன்-மாணவர்கள் கல்விக்கூடங்களுக்குச் செல்லாமலிருக்கிறார்கள் என்ற செய்தி அறிந்து வேதனையுடன் எழுதுகிறேன். மொழிப் பிரச்சினையில் இயல்பாகவே அமைந்துவிட்டிருக்கிற
அ. க.—12