உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/193

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

185

தொன்மையான மொழி—வளமான மொழி” என்று கூறினேன். வேறோர் நிருபர் குறுக்கிட்டு, “சமஸ்கிருதத்தைக் கொண்டால் என்ன?” என்று கேட்டார்; “அது பேச்சு வழக்கு அற்றமொழி” என்று பதிலளித்தேன் இவைகளையும் முதலமைச்சர் பக்தவத்சலம் மக்களிடம் எடுத்துக் கூறுவார் என்று நான் எதிர்பார்க்க முடியுமா!! ஆனால், இதனை நான் கூறியிருப்பதை நானே எப்படி மறந்துவிட முடியும்!

இந்துஸ்தான் டைம்ஸ் இதழ் நிருபர் காடிலால், பேட்ரியட் நாளிதழ் நிருபர் கிரிஷ்மதுர், ஸ்டேட்ஸ்மென் நாளிதழ் நிருபர் ரன்ஜித்ராய், டைம்ஸ் ஆப் இந்தியா சுதர்சன்பாடியா, இந்தியன் எக்ஸ்பிரஸ் (டில்லி வெளியீடு) திரிபாதி, இந்துஸ்தான் ஸ்டாண்டார்டு சைலேன் சட்டர்ஜி, பி. டி. ஐ அமைப்பிலிருந்து குப்தாவும் என். பாலசுப்பிரமணியமும், இந்து நிருபர்கள் இ. கே. ராமசாமியும் பட்டாபிராமனும், அமிர்தபஜார் பத்திரிகை நிருபர் தத்தா, ஈவினிங்நியூஸ் சி. பி இராமச்சந்திரன், மெயில் பி. ராமசாமி, அகில இந்திய ரேடியோ நிலையத்திலிருந்து கே. ஜி. ராமகிருஷ்ணன், யூ. என். ஐ. அமைப்பிலிருந்து கணபதி, இன்பா அமைப்பிலிருந்து ராஜேந்திரகபூர், நவபாரத் இதழிலிருந்து ஜெயின், இந்துஸ்தான் இதழிலிருந்து சந்திராகர், இந்துஸ்தான் டைம்சிலிருந்து தார், தினமலர் ராதா கிருஷ்ணன், பிரீபிரஸ் ஜர்னல் சுவாமிநாதன், நவ்பாரத் டைம்ஸ் ரக்பீர் சகாய், பினான்ஷியல் எக்ஸ்பிரஸ் சந்தானம், சங்கர்ஸ் வீக்லி கோபு, திருச்சூர் எக்ஸ்பிரஸ் ஆர். சுந்தரம், ஜன்ம பூமி, சுயராஜ்யாவிலிருந்து ஏ. எஸ் ரகுநாதன், இவர்கள் அன்று வந்திருந்தவர்கள். சிலருடைய பெயர்கள் விடுபட்டுப் போயிருக்கக்கூடும், ஒருமணி நேரத்துக்கு மேலாக அவர்கள் கேள்விகள் கேட்க, நான் பதில் அளிக்க, ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ளும் வாய்ப்பு மிகுந்த விதமாக அந்த மாநாடு நடைபெற்றது.

அத்தனை நிருபர்களை மொத்தமாகச் சந்திப்பது எனக்கு முதல் முறை. அவர்கள் ஒவ்வொருவரும் இது போன்ற நிகழ்ச்சிகள் பலவற்றிலே பலமுறை கலந்து பழக்கப்பட்டிருப்பவர்கள். என்றாலும், அவர்கள் அனைவருமே என்னிடம் மிகவும் நட்புரிமையுடன் நடந்து