47
களை’ப் பற்றிப் பேசினாலொழிய என்நா சுவை பெறுவதில்லை. நீங்கள் ஏதேதோ கேட்கிறீர்கள்,
லாவோஸ் பிரச்சினை என்கிறீர்கள்
காஷ்மீர் நிலைமை என்கிறீர்கள்
பாகிஸ்தான் நிலைமை என்கிறீர்கள்
ஏதேதோ கேட்கிறீர்கள். ஆனால், என் மனம் ஒரே ஒரு விஷயத்திலேதான், நானே எவ்வளவு தடுத்துப் பார்த்தாலும், கட்டுப்படுத்த முயன்றாலும், திரும்பத் திரும்பச் சென்று தாவுகிறது—அந்தப் பயல்களைப்பற்றித்தான் எண்ணுகிறேன், எண்ணுகிறேன், எண்ணியபடி இருக்கிறேன். யாராரையோ எப்படி எப்படியோ மண்டியிடச் செய்துவிட்டேன், கூட்டாளிகளாக்கிக் கொண்டேன்—ஆனால், இந்தப் பயல்களோ......!!
இவ்விதமான கவலைமிகு எண்ணம் கொண்டுள்ள காமராஜர் நமக்கு இந்தக் கிழமை வழங்கியுள்ள பட்டங்கள்,
பைத்தியக்காரர்கள்
பகற்கனவு காண்பவர்கள்
என்பனவாகும்.
காமராஜர், அகில இந்தியக் காங்கிரசுக்குத் தலைவராகிவிட்டார். இனி அவருடைய நேரமும் நினைப்பும், ‘அனைந்திந்திய, அதிதீவிர, அதிஅவசர’ப் பிரச்சினைகளிலேயே பாயும் பதியும், இணையும் பிணையும், மற்ற மற்றச் சில்லறைகளைச் சின்னவர்களிடம் விட்டுவிடப் போகிறார்,
மக்களே, ஒழுங்காக இருங்கள்!
மக்களே, ஒன்றுபட்டு இருங்கள்!
மக்களே, உங்களை வாழ்த்துகிறேன்.
மக்களே, உங்கள் வணக்கத்தை ஏற்றுக் கொள்கிறேன்.
நாடு முழுவதும் நன்றாக இருக்க வேண்டும்.
உலகம் முழுவதும் க்ஷேமமாக இருக்க வேண்டும்
என்பன போன்ற உபதேசங்களை அருளியபடி இருந்திடப் போகிறார், அந்த உயர்ந்த நிலைக்கு அவர் சென்று