64
ஒருவருக்குக் கூட இதம்செய்ய” என்றுரைத்தான். சீமான் மகனுக் குப் புரியவுமல்லை; இந்தப் பேச்சு பொருளுள்ளதாகவும் தெரிய வில்லை.
“முடியும் நண்பா! முணுமுணுக்காமல், விவரம்கூறு.” என்று கேட்டான், “கூறவா! கூறுகிறேன் கேளப்பா, கருணாகரா! அதோ அடுத்த தெருவில் ஒருவன் ரொட்டிக் கடை வைத்திருந்தான்; எனக்குத் தெரியும். பரம ஏழைகள் அந்தக் கடையில் ரொட்டி வாங்குபவர்கள். விலையைத்தான் ஏற்றிவிட்டாரே உன் தகப்பனார்; இவன் ரொட்டியின் விலையை ஏற்றினான்; ஏழைகளால் அந்த விலை கொடுத்து வாங்க முடியவில்லை, கடை தூங்கிற்று; அவன் கடையில் போட்டிருந்த ஆயிரம் டாலர் அடியோடு நஷ்டமாயிற்று. அவனிடம் இருந்த மொத்த ஆஸ்தியே அதுதான். அவ்வளவும் போய்விட்டது” என்றான்.
அழுத்தந் திருத்தமாகப் பேசலானான் சீமான் மகன், “அப்படிச் சொல்லு விவரத்தை! வா! உடனே போய், அந்த கடைக்காரன் இழந்த ஆயிரம் டாலரைத் திருப்பிக் கொடுத்து அவனுக்கு ஒரு புதிய ரொட்டிக் கடையும் வைத்துக் கொடுக்கலாம்” என்றான்.
“எழுதப்பா, செக்! ஆயிரம் டாலருக்கு மட்டுமல்ல; அவன் நஷ்டமடைந்ததால் ஏற்பட்ட விபரீத விளைவுகளின் காரணமாக ஏற்பட்ட நஷ்டங்கள் எல்லாவற்றுக்கும், செக் எழுதிக் கொடு! ஐம்பதாயிரம் டாலர் செக் ஒன்று கொடு! ஏனென்கிறாயா? கடை திவாலாயிற்றாம், அவன் அதன் காரணமாகக் குழம்பினான், பித்துப் பிடித்துவிட்டது, அவன் இருந்துவந்த இடத்தை விட்டு அவனை வெளியேறச் சொன்னார்கள், அவன் அந்தக் கட்டடத்துக்குத் தீயிட்டான். ஐம்பதாயிரம் டாலர் பாழ்! அவனோ பித்தர்விடுதியில் அடைபட்டான், செத்தும் போனான். அடுத்த செக் பத்தாயிரம் டாலருக்கு. ஏனா? அவன் மகன், தகப்பனை இழந்ததால் தறுதலையானான்; கெட்டலைந்தான்; அவன்மீது ஒரு கொலைக் குற்றம்; மூன்று ஆண்டுகள் வழக்கு; அதற்கான செலவு நீதித்துறைக்கு, பத்தாயிரம் டாலர். அதையும் நீதானே கொடுக்கவேண்டும்; கொடு.
“சர்க்காருக்கான செலவு இருக்கட்டும்; நமது உதவி தேவையில்லை சர்க்காருக்கு; ரொட்டிக் கடைக்கு