உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/81

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

73

இன்று கதையில் வரும் சீமான் மகன்போல, இளகிய மனமும், இரக்கப் பேச்சும் காட்டுகிறார்களே, அது ஒரு வித மகிழ்ச்சியைத் தரத்தான் செய்கிறது.

உணவுப் பண்டங்களின் விலை ஏறிவிட்டிருப்பதற்கு காரணம், உற்பத்திக் குறைவு அல்ல; உற்பத்தியான பொருளைச் சீராக விநியோகிக்கும் முறை இல்லாததே என்று நாம் முன்பு சொன்னோம், நையாண்டி செய்தனர் நாட்டின் நாயகர்கள். இன்று, அதையே, ஒரு கண்டு பிடிப்பு போல எடுத்துக் கூறுகிறார்கள்; பொதுமக்கள் நினைவாற்றல் அற்றவர்கள் என்ற எண்ணத்தில். பொது மக்கள் ஆளவந்தார்களைத் திருப்பிக் கேட்க முடியாதவர்கள்; ஒப்புக்கொள்வோம். ஆனால், தமக்குள் பேசிக் கொள்ளாமலா இருக்கிறார்கள்; நேற்றுவரை இந்த இந்த நேர்மையாளர்கள். விலை ஏற்றத்துக்குக் காரணம் உற்பத்தி போதாது என்றார்கள்; இன்று உற்பத்தியில் குறைவில்லை, விநியோகத்தில் கோளாறு என்கிறார்களே; இவர்களுக்கென்ன, நாளைக்கு ஒரு நாக்கா? வேளைக்கு ஒரு பேச்சா என்று.

விலைவாசி ஏறவில்லை; ஏற்றிவிட்டிருக்கிறார்கள் என்றோம்.

புவிமெச்சும் பொருளாதாரப் போதகாசிரியர் எனத் தம்மைக் கருதிக்கொண்டு, வளரும் பொருளாதாரம் இது, பணப்பெருக்கம் ஏற்பட்டிருக்கிறது; அந்நிலையில் விலைவாசி ஏறுவது தவிர்க்க முடியாதது என்று பேசினர்.

இன்று? நந்தா பேசுகிறார்,

‘திட்டமிட்ட அபிவிருத்தித் துறையில் விலைவாசிகள் ஏற்றம் தவிர்க்க முடியாதது என்பதை நான் ஒப்புக்கொள்ள முடியாது.’

என்பதாக. ஆமாம் என்று ஆளவந்தார்கள் அனைவருமே சொல்கிறார்கள்.

கள்ள மார்க்கெட்—
கொள்ளை இலாபம்—
கறுப்புப்பணம்-

என்று முன்பு நாம் சொன்னபோது,