உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 14.pdf/96

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

இருந்தால், இரண்டாம் ஆண்டு முடிகிற நேரமாகப பார்த்து,

இலஞ்சம் வெகுவாகக் குறைந்துவிட்டது, கொடுப்பவர்களுக்கும் குலைநடுக்கம் கண்டு விட்டது; வாங்குபவர்களுக்கும் கிலிபிடித்து விட்டது.

எடுத்த சபதத்தை நந்தா நிறைவேற்றி விட்டார்! இலஞ்சப் பேய் ஒழிந்துவிட்டது

என்பதாக நாட்டுக்கு அறிவித்துவிட வழி இருக்கிறது இதற்காகவே நந்தா திட்டமிட்டு இவ்விதம் செய்தார் என்று நான் கூறவில்லை. இவ்விதம் எண்ண இடமளிக்கிறது அவருடைய வேலை முறை என்று கூறுகிறேன்.

வங்கக் காங்கிரஸ் தலைவர் அட்டுல்யாகோஷுக்கு இது கட்டோடு பிடிக்கவில்லை.

வேறு பல காங்கிரஸ்காரர்களுக்கும் இது பிடிக்கவில்லை.

வெளிப்படையாகவே இவர்கள் பேசினர்; வெகுண்டெழுந்தார் நந்தா; சமிதியைக் குறைகூறுகிறவர்களைக் கண்டிக்கலானார். வங்கத் தலைவர் வாளாயிருக்கவில்லை; காங்கிரஸ் செயற்குழுக் கூட்டத்தில், இதுபற்றி விவாதிக்க வேண்டுமென்று கேட்கிறார். நந்தா கூறுகிறார், நானாக இந்தச் சமிதியை ஆரம்பிக்கவில்லை, காங்கிரஸ் தலைவர் காமராஜரின் சம்மதம் பெற்றுத்தான் ஆரம்பித்தேன் என்று.

காமராஜரோ, சமிதி பற்றி எதுவுமே பேசத்தேவை இல்லை செயற்குழுவில் என்று கூறிவிட்டார்.

சதாசர் சமிதி அல்லது குழு இலஞ்சப் பிரச்சினையை, மிக எளிதாக, மிக விரைவாக, கடினமான எந்த முறைகளுமின்றியே தீர்த்துவிட முடியும் என்று நம்பிடும் பரிதாபத்தை ‘இந்து’ பத்திரிகை எடுத்துக் காட்டியிருக்கிறது.

நாற்பத்து ஐந்தே நாட்களில் ‘சதாசர்’ தன்னிடம் கொடுக்கப்பட்ட புகார்களைத் தொகுத்து, தரம் பிரித்து, பரிசீலித்து, முடிவுகள் எடுத்து கருத்தையும் கூறிவிட்டது! அந்தக் கருத்து என்னவென்றால், புகார்களின்