90
நன்கொடை, இனாம் என்ற எந்தப் பெயராலும் தொழிலதிபர்கள், வணிகர்கள், முதலாளிகள், தொழிற்சாலை நடத்துபவர், சர்க்கரை வியாபாரிகள் டாட்டாக்கள், பிர்லாக்கள், சிங்கேனியாக்கள் போன்றாரிடம் தேர்தல் நிதி வசூலிக்கமாட்டோம் என்று ஆளுங்கட்சி திட்டவட்டமாக அறிவித்துவிட வேண்டும்.
இப்படிப்பட்டவர்களிடம் இருந்து வாங்கப்படும் பணம் பிரம்மாண்டமான அளவுள்ளது.
இந்தப் பணம் அமைச்சர்களையும் காங்கிரஸ் அரசியல்வாதிகளையும் ‘குஷி’ படுத்தவும், வியாபார சம்பந்தமாக எந்தவிதக் குறுக்கீடுகள் செய்யாமல் இருப்பதற்காகவும் தரப்படுகிறது.
இந்தப் பணம், தாங்களே மனமுவந்து, தர்ம நியாயத்துக்காகவோ, தேச பக்தி காரணமாகவோ தரப்படுகிறது என்று ஒருவரும் நம்புவதில்லை. இந்தப் பணம் ஒருவிதமான இலஞ்சம்தான்.
பர்மிட், லைசென்சு, கோட்டா பெறுவதற்காகத் தரப்படுகிறது.
ஆளுங்கட்சி துணிந்து தன்மீது உள்ள இந்தக் கறையைத் துடைத்துக்கொள்ளட்டும். பிறகு நாட்டிலே ஒரு பரிசுத்தம் ஏற்படும்.
நன்கொடை திரட்டுவதை நிறுத்துவதோடு, காங்கிரஸ் தலைவர்களுக்கு, ஆயிரக்கணக்கில், இலட்சக்கணக்கான ரூபாய் நோட்டுகளை மாலையாகக் கட்டிப் போடுகிறார்களே, அதை நிறுத்திவிட வேண்டும்.
இப்படி ‘நோட்டு மாலை’ போடுபவர்கள், பஸ் முதலாளிகள் அல்லது மற்ற முதலாளிகள். எதற்காகப் போடுகிறார்கள்? இந்தப் பொதுஜனத் தலைவர்களிடம் கொண்ட அன்பினால் அல்ல! ஏற்கெனவே பெற்ற சலுகைக்காக அல்லது இனிச்சலுகை பெறவேண்டும் என்பதற்காகப் போடுகிறார்கள்.
க்ஷேம நல சர்க்காரில், மந்திரிகளிடம், சலுகைகள் காட்டுவதற்கான அதிகாரம் மிகப் பெரிய அளவில்