உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

17 நெடுநாளைக்கு முன்பே இப்பணி துவக்கப்பட்டிருக்க வேண்டும். முன்பே இப்பணி நடைபெற்றிருக்குமானால் இப்போது சிறுபான்மைக் கருத்து என்ற பேச்சுக்குக்கூட இடம் ஏற்பட்டிருக்காது. ஆனால், அந்தப் பேக்சு ஏற் பட்டுவிட்டதாலேயே, மனச்சோர்வு அடைந்துவிட வேண்டும் என்பது இல்லை; ஆலின் விதை மிகச் சிறிது!! சென்னை சட்டமன்றத்தில் தி. மு. கழகத்தினரின் எண்ணிக்கை 15! இப்போது 50! எனினும், எண் ணிக்கை 15 என்றிருந்த போதும், நாம் மிகமிகச் சிறு பான்மையினராக இருக்கிறோம் என்ற தயக்கம் காட்டிய தில்லை; சரியென்று பட்டதனைச் செப்பினோம். அந்தச் செயலை எள்ளிநகையாடியோரும் உண்டு; ஆனால், அந்தநிலை இன்றி ஓர் வளர்ச்சி நிலையை, கழகத்துக்குத் தந்திருப்பதனை நாடு அறியும்; நல்லோர் மகிழ்கின் றனர்; மற்றையோர் மனத்தாங்கல் கொண்டுள்ளனர். ஒரே மரத்தில் ஒரு கிளையில் குயிலும் மற்றோர் கிளையில் காகமும் இருக்கின்றன; மரம் என்ன செய்யும்! அது போலச் சமூகத்தில் நமது கழக வனர்ச்சி கண்டு மகிழ்ச்சி கொள்பவர்களும் இருக்கிறார்கள். மல்லாந்து படுத்துக்கொண்டு துப்பிக்கொள்பவர்களும் கிறார்கள். இருக் அன்றும் இன்றும், கழகம் கூறுவதை மறுப்பதும், மறைப்பதும், திரிப்பதும், குறைப்பதும், குலைப்பதும் தொழிலாக்கிக் கொண்டவர்கள் உண்டு; அன்று மறுத்துக் கொண்டிருந்தவர்களிலே சிலர் இன்று மனம் மாறி நமது கருத்தை ஆதரிக்க முற்பட்டுள்ளனர்; அன்று நமது அரணாக நின்றவர் சிலர் நினைப்பு மாறியதால் இன்று நமது மாற்றார்கை அம்புகளாகியுமுள்ளனர்; பூத்தது உதிர்வதும், பெற்றது மடிவதும், சேர்த்தது ஒழிவதும்போல என்று கொள்வோம். மொத்தத்தில் கணக்கெடுத்தால் 'சிறுபான்மை' என்றிருந்த கணக்கு நாம் மகிழத்தக்க மாற்றம் பெற்றிருப்பது தெரியும். இப்போதும் 'சிறுபான்மை' என்று எண்ணிக்கைதான் சட்டமன்றத்தில். ஆனால், 15-50 ஆக வளர்ந்துள்ளது. இந்த வளர்ச்சி கண்டு, மாற்றுக்கட்சியினர் தமது முறைகளை மாற்றிக்கொண்டனரா என்றால், இல்லை; வேகமாகி இருக்கிறது. அன்றுபோலவே இன்றும், இட்டுக் அ. க. 2-2