உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

21 என்ற தீர்மானம் கொண்டு வந்தது கழகம். ஆதரவாக 44-வாக்குகள்; எதிர்த்து 84. இம்முறையும் வெற்றி இல்லை. ஆனால், கழகக் கருத்துக்கு ஏற்பட்ட வளர்ச்சி தெரிகிறதல்லவா! 'சிறு பான்மை' வளருகிறது என்பதற்கு இந்தச் சான்று. 1958-ல் மொழிபற்றிய கழக யோசனையை வெளி யிட்டவர் தோழர் அன்பழகன்; 1963-ல் தோழர் மதியழகன். எனவேதான் கூறுகிறேன் சிறுபான்மையினரின் கருத்து என்றால், ஆட்சியினர் அலட்சியப்படுத்திவிடு வதும் தவறு, அந்தக் கருத்து எப்போதுமே சிறுபான்மை யினர் கருத்தாகவே இருந்துவிடுமோ என்று அந்தக் கருத் தினர் அச்சப்படுவதும் தவறு. நம்பிக்கையுடனும், நல்ல முறையிலும் பணியாற்றினால், சிறுபான்மையினர் கருத்து என்று கூறப்படுவதையே, நாட்டு மக்களின் கருத்து என்ற அளவுக்கு வளர்ச்சி பெறச் செய்வதில் வெற்றி பெற்றிட முடியும். பெங்களூர் விஞ்ஞானத்துறை பயில்வோர் இதனை உணர்ந்து அதற்கு ஏற்றபடி தொடர்ந்து பணி யாற்ற வேண்டும் என்பதனைத் தெரிவித்துக் கொள் கிறேன். சிறுபான்மையினர் என்பது குறித்து மிக அதிகமான அளவு சிந்தனையைச் செலுத்த வேண்டிய வாய்ப்பு எனக்கு, துவக்கநாள் தொட்டு. சிறுபான்மை என்பதற்கு எண்ணிக்கையை மட்டுமே காரணமாகக்காட்டுகிறார்கள்; அந்த முறையிலே மட்டும் கவனித்தால் அந்தப் பிரச்சினை யின் முழு உண்மை துலங்காது. ஜாதி,மதம், மொழி அடிப்படையில் அமைந்துவிடும் சிறுபான்மையினருக்கும், ஜாதி, மதம், மொழி, அரசு- முறை, ஆகியவைபற்றிய கருத்தினைக் கண்டறிந்து எத்த கைய கருத்தினை எவரெவர் பெற்றுள்ளனர் என்று கணக் கெடுத்து, அதிலே பெரும்பான்மை- சிறுபான்மை என்று வகைப்படுத்திப் பார்ப்பது பிரச்சினையின் உண்மையை உணர்ந்துகொள்ள உதவும். மதம், ஜாதி, மொழி என்பனவற்றின் காரணமாக அமைந்துவிடும 'சிறுபான்மை' அதிகமான அளவிலோ, அதிகமான வேகத்திலோ வளர்ந்து 'பெரும்பான்மை ஆகிவிடுவது இயலாத காரியம்.