________________
26 உள்ள இன்றைய அமெரிக்காவில், சிறுபான்மையோர் பிரச்சினை இருக்கத்தான் செய்கிறது. உரிமை கேட்டு, நீக்ரோ மக்கள் கிளர்ச்சி நடத்திக்கொண்டிருக்கிறார்கள்; ஆகவே, சிறுபான்மையோர் பிரச்சினை என்பது, யாரோ சில சிறு மதியாளர்கள் வேண்டுமென்றே கட்டிப் பிடித்துக் கொண்டு அழுகின்ற முறையில் இருக்கிறது என்று தவறாக எண்ணிக்கொள்ளாதீர்கள்; எங்கெங்கு, எந் தெந்தச் சமயத்தில், என்ன காரணம் காட்டி, சமூகத்தில் ஒரு பகுதியினர் மற்றோர் பகுதியினரைக் கொடுமையாக நடத்தினாலும் இழிவுபடுத்தினாலும், உரிமையைப் பறித்தாலும். வளர்ச்சியைத் தடுத்தாலும், ஆதிக்கம் செலுத்தினாலும், கொடுமைக்கு ஆளாக்கப்பட்ட, உரிமை பறிக்கப்பட்ட, இழிவாக நடத்தப்பட்ட பகுதி, எதிர்த்துக் கிளம்பியே தீரும், எதிர்ப்பின் முறைகள் வேறு வேறாக இருக்கலாம்; ஆனால், ஆதிக்கம் செய்பவர்களை எதிர்த்து நிற்கும் இயல்பு எங்கும் உண்டு, எப்போதும் உண்டு; ஆதிக்கக்காரர் மிகப்பெரும்பாலோராக இருப்பினும் கொடுமை செய்திட அவர்களுக்கு உரிமை கிடையாது, வலிவு இருக்கலாம்! கொடுமைக்கு ஆளானவர்கள் சிறிய அளவினராக இருப்பினும், எதிர்த்து நிற்கும் உரிமையும் இயல்பும் அந்தச் சிறுபான்மையினருக்கு உண்டு; சிறுபான் மையினர் என்பதற்காக அவர்கள் உரிமை இழந்துவிட வேண்டும் என்பதில்லை, கொடுமையில் உழலவேண்டும் என்பதில்லை. இந்த உணர்ச்சிதான், சிறுபான்மையோர் பிரச்சினை என்பதன் அடிப்படையாக அமைந்திருக் கிறது." என்று விளக்கம் தந்தேன். பொதுவாக ஒரு கருத்து இங்குப் பரப்பப்பட்டிருக் கிறது- இங்கு மட்டுந்தான் சிறுபான்மையோர் பிரச்சினை என்பது வேண்டுமென்றே கிளப்பிவிடப்பட்டிருப்பதாக, உண்மை முற்றிலும் வேறு. நீண்ட பல ஆண்டுகளாகக் குடியாட்சி முறையை மேற்கொண்டுள்ள பல நாடுகளில்- ஐரோப்பிய பூபாகத்து நாடுகளில்- இன்றும்கூட சிறு பான்மையோர் பிரச்சினை இருந்து வருகிறது. காரணம்? ஆதிக்கம் செலுத்திடும் இயல்பு. அரசு நடத்தும் வாய்ப்புப் பெற்றதனாலோ. ஜாதி காரணமாகவோ, மொழி காரணமாகவோ, மத அடிப்படையிலோ, பொரு ளாதார வலிவின் துணை கொண்டோ ஏற்பட்டுவிடு கிறது; ஆதிக்கம் செலுத்திச் செலுத்தி அதிலே ஒரு தனிச் சுவை கண்டுவிட்டவர்கள், எளிதிலே அந்த இயல்பினை