________________
34 யாத இடம், அத்தனை தனிமை! அவ்வளவு 'பாதுகாப்பு'! பக்தவத்சலனாரின் அரசு என்ன இலேசுப்பட்ட தா! அவர் தானென்ன சாமான்யமானவரா - இந்தியப் பேரரசின் போலீஸ் அமைச்சர் நந்தாவினாலேயே பாராட்டப்பட் டவர் - கற்பாறைபோல் நின்றார் என்பதாக! பாதுகாப்புச் சட்டப்படி சிறைபிடித்து வைத்திருப் பதால், மிக்க பாதுகாப்பாக வைத்திருக்க வேண்டும் என்பது முதலமைச்சரின் திட்டம்போலும். அதனால் தான், பக்கத்திலேயே உள்ள இளம் குற்றவாளிகளுக்கான சிறைக் கட்டடத்தில் பல நூறு பேர் இருக்க, கருணாநிதிக் காகவே ஒரு பெரிய தனிச் சிறையை ஒதுக்கி, அதிலேயும், தனியாக வைத்திருக்கிறார்கள். மக்களைப் பெற்றவர்கள் மனம் நொந்து, ஏனோ இந்தக் கொடுமை என்று கண்ணீர் மல்கிடும் நிலையில் இருந்தபடி கேட்பார்கள். கேட்டால் என்ன! பக்தவத்சல னாரா இதற்கெல்லாம் அசைவார்! கற்பாறைபோல நின் றார் என்று சிறப்புப்பட்டம் பெற்றுவிட்டாரே!! தீக் குளித்து இறந்தவர்களை எண்ணி எண்ணி இந்த நாடே பதறுகிறது, கதறுகிறது; நல்லோர் அனைவரும் நெஞ்சு நெக்குருகிப் போயினர்; இந்திக்காரர்களிலேகூடச் சிலர், செய்தி கேட்டு அதிர்ச்சி அடைந்துள்ளனர்; ஆனால், முதலமைச்சர் மட்டும்தான், இதயத்தை எடுத்துத் தனி யாக வைத்துவிட்ட நிலையினர் போலாகி, துளியும் ஈவு இரக்கம், மனிதத்தன்மை அற்றவராகி. தோழர் மதியழகன் மெத்த மன வேதனையுடன் குறிப்பிட்டுள்ளது போல, தீக்குளித்த தீரர்களின் பிணங்களின் மீது தூற்றல் சேற்றினை வாரி இறைக்கிறார். எதிர்காலக் காவியமாகப் போகிற எழுச்சிமிக்க தியாகத்தை, இன்று கிடைத்துள்ள இடம் என்றென்றும் தமக்கு என்ற ஏமாளித்தனம் மிகுந்த இறுமாப்பு உணர்ச்சியுடன் எண்ணிக்கொண்டு, இழித்துப் பேசுவதும், பழித்து உரைப்பதும், தமிழ் மண்ணின் மாண்பினையே மங்கிடச் செய்திடும் மாபாதகச் செயல். ஆனால், துணிந்து செய்கிறார்கள் துரைத்தனம் நடாத்து வோர். சென்னையிலிருந்து நானூறுகல் தொலைவில், பாளையங்கோட்டையில் தனிமைச் சிறையில் போட் டடைத்துக் கொடுமை செய்வதனைத் தமிழகம் கேட்டுத் தத்தளிக்கிறது; விம்மிடுகின்றனர் தாய்மார்கள்; இப்படி