உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 15.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

36 இப்போது நமது கழகத் தோழர்கள் அடக்குமுறைத் தீயிலே தள்ளப்பட்டுக் கொடுமைகளால் தாக்கப்பட்டு வருவதைக் காணுமபோது என்னால், பீறிட்டுக் கொண்டு கிளம்பும் வேதனையை அடக்கிக்கொள்ள முடியவில்லை. உள்ளம் மேலும் உறுதிப்பட வேண்டும் என்று தோன்று கிறது. கொடுமைகள் இழைக்கப்படும்போது, அநீதி தலை விரித்தாடும்போது, அக்கிரமம் தன் அகன்ற வாயினைத் திறந்து அகோரக் கூச்சலிடும்போது, எல்லாம் இறுதியில் நன்மைக்கே என்ற தத்துவத்தைத் துணைக்கழைத்துச் சமாதானம் தேடிக்கொள்ள முடியவில்லை. காரணம், நாம், ஒரு அரசியல் கட்சியின் உறுப்பினர்கள் என்ற முறையிலே மட்டும் இருந்து வருபவர்கள் அல்லர்; பாசத் தால் பிணைக்கப்பட்ட ஒரு குடும்பமாகி விட்டிருக் கிறோம். அதனால் நம்மில் சிலருக்கு இழைக்கப்படும் கொடுமை நம் எல்லோருடைய உள்ளத்தையும் வேதனை யில் ஆழ்த்திவிடுகிறது. ஆனால், நாம் இத்தகைய கொடுமைகளைத் தாங்கிக் கொண்டே தீரவேண்டும். உள்ள நிலை அது. இன்று இங் குள்ள காங்கிரஸ் அரசு, நாட்டிலே ஏற்பட்டுள்ள நிலை யைக் காரணமாக்கிக் கொண்டு, கழகத்தை அழித் தொழிக்கத் திட்டமிட்டு விட்டிருக்கிறது. சுட்டுத் தள்ளவே கூசாத ஒரு ஆட்சி, சிறையில் தள்ளவும் வழக்கு களைத் தொடுக்கவுமா கூசும்! நல்லாட்சிக்குத் தேவை யான எல்லா இலக்கணத்தையும் இழந்துவிட்ட நிலையில், கொடுமைகளன்றி வேறென்ன காணமுடியும்? காட்டுப் பன்றியிடமிருந்து உறுமலையும், ஓநாயிடம் இரத்த வெறி யையும் தவிர, வேறெதைக் காணமுடியும்? ஆட்சி தவறான முறையை மேற்கொள்ளும்போது. நாட்டுக்கும் காட்டுக்கும் உள்ள வேறுபாடு மறைந்து விடுகிறது. கருணா கவலை கப்பிய நிலையில் கருணாநிதியுடன் பல விஷ யங்கள் குறித்துப் பேசிக்கொண்டிருந்தேன் . நிதியோ, இடையிடையே, தருமபுரித் தேர்தல் பற்றியே பேசிடக் கணடேன்; உடல் நலத்தைக் கவனித்துக் கொள், ஏதேனும் உடல் நலக் குறைவு இருப்பதாகத் தோன்றி னாலும் உடனே மருத்துவர் தேவை என்பதைத் தெரியப் படுத்து என்று நான் கூறிக்கொண்டிருப்பேன், இடை மறித்து கருணாநிதி, தருமபுரித் தேர்தலில் காங்கிரஸ