69
கழகத் தோழர்கள் மட்டுமல்ல, பொதுமக்களிலே ஒரு பகுதியினரே கூட, சென்ற தேர்தலின்போது காணப்பட்ட புள்ளிவிவரத்தைக் கொண்டு ஒரு தவறான முடிவுக்கு வந்திருந்தனர். வெற்றிபெற்ற சுயேச்சை உறுப்பினர் மறைந்த திரு. வீரப்ப செட்டியாருக்குக் கிடைத்த 24 ஆயிரம் வாக்குகளும், காங்கிரஸ் எதிர்ப்பாளரின் வாக்குகள், ஆகவே, இம்முறையும் அந்த 24 ஆயிரம் வாக்குகளும் காங்கிரசுக்கு எதிர்ப்பாகவே இருக்கும், ஆகவே, அவை அவ்வளவும் கழகத்துக்குச் சேரும் என்று கணக்கிட்டனர்.
அந்தக்கணக்கு பொய்த்துவிடுமா என்பது பற்றிய எண்ணம்கூட எழவில்லை; அவ்வளவு நிச்சயமாக இருந்து விட்டோம். தேர்தல் முடிவு, அந்தக் கணக்கு தவறு என்பதைக் காட்டிவிட்டது; அந்த வாக்குகளைக் காங்கிரஸ் கட்சி பெற்றுக்கொள்ள எல்லா முறைகளையும் பயன்படுத்திக் கொண்டது. அந்த வாக்குகள் நம்மை விட்டுவிட்டு வேறு எங்கும் போய்விடாது என்று எண்ணினோம்; தோல்வி கண்டோம்.
இவற்றை நான் கூறுவதன் காரணம், தம்பி! தோல்வி எதிர்பார்த்ததுதான் என்று வாதாட அல்ல; வெற்றி நிச்சயம் என்று அதிக அளவு நம்பிக்கையை வளர்த்துக்கொண்டு விட்டோம், தொகுதியின் நிலைமையை நன்கு ஆராயாமல் என்பதைக் காட்டத்தான்.
இன்றுகூட தனித்தனியாகத் தருமபுரித் தொகுதி மக்களைக்கண்டு,
இந்தி ஆட்சிமொழி ஆக்கப்படுவது நியாயமா?
மாணவர் கிளர்ச்சியை இரக்கமற்ற விதமாகத்தாக்கித் தகர்க்க முற்பட்டது நியாயமா?
அடக்கு முறையை அவிழ்த்து விட்டு 59 பேர் துப்பாக்கிக்குப் பலியாகிடச் செய்தது நியாயமா?என்று கேட்டால், நியாயம் அல்ல என்று தான் கூறுவார்கள்.
ஆனால், காங்கிரஸ் பணியாளர் இரண்டுதிங்களாக நடத்திவந்த பிரசாரம், அதற்காக நடப்பது அல்ல இந்தத்