இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காஞ்சிக் கடிதம்: 83
ஒளி படைத்த கண்ணினாய்!
★ உயர இருப்பதெல்லாம் உயர்ந்ததாகி விடுமா!
★ ஆற்றல் உணர்ந்தோ போற்றுகின்றனர்?
★ புகழ்பவர் புரிந்தவர்! புகழாதவர் புத்தி கெட்டவராம்!
★ ஆதாயச் சுவை புகழ் பாடச் செய்கிறது!
★ கொடுப்பவர் எதையும் இழப்பதில்லை! ஏதாகிலும்
பெறுவார்!
★ பெறுபவன் இழக்கிறான்!
★ செயல்–முதல்! உழைப்பு–முறை! புகழ்–விளைவு!
★ அன்பு காட்டுதல் வேறு! துதி பாடுதல் வேறு!
★ சேற்றிலே செந்தாமரை இருந்திடினும் சேறு சந்தனமாகி
விடுமா?
★ பேச்சிலும் எழுத்திலும் ஒளி மிகத் தேவை!
தம்பி,
ஐயாவோட குழந்தை!
எஜமானரோட மகன்!
சின்ன எஜமானரு,