119
தாக்க முடியும் – பழுது பார்க்க வேண்டும் – பலவர்ணம் தீட்டவேண்டும் – சுற்றுச் சுவரைக் கட்டவேண்டும்...
பே : ஆமாம், பூந்தோட்டம் அமைக்க வேண்டும்—
சீ : பழத்தோட்டம் நல்லது.
பே : பூவிலிருந்துதானே பழம்?...?
சீ : பழம் தராத பூ உண்டு.
பே : ஆமாம், ஆமாம் – நல்லவிதமாகத் தோட்டம் அமைக்க...
சீ : தக்க திட்டம் வேண்டும்.
(ஒருகுரல்: பணம் வேண்டுமே, இவ்வளவு பெரிய மாளிகையைத் திருத்த ஏராளமாக வேண்டும்)
பே : (ஆர்வத்துடன்) பயம் வேண்டாம்! நமது மாளிகையிலே, ஏராளமான பணம் புதைத்து வைக்கப்பட்டிருக்கிறது. இடத்தைக் கண்டுபிடித்து, செல்வத்தை எடுத்து, மாளிகையைச் சீரும் சிறப்புமுள்ளதாக்குவோம்!
(பலர், சபாஷ், பலே! என்று களிப்புடன் கூவுகின்றனர்.)
சீ : (கனைத்துக் கொண்டு) முடியும். செய்யலாம். ஆனால்...
பே : செய்ய முடியாது என்ற பதமே எம்மிடம் கிடையாது. இந்த மாளிகையைக் கைப்பற்ற முனைந்தபோது காட்டிய மாவீரம் மங்கிவிடவில்லை...
சீ : அந்த ஆர்வத்தையும் நம்பிக்கையையும் நான் பாராட்டுகிறேன். ஆனால், புதைந்துள்ள பொருளைக் கண்டுபிடித்து, பிறகு மாளிகையைத் திருத்துவது என்றால் காலம் அதிகமாகும். அதற்குள் கலனான பகுதி மேலும் கலனாகக்கூடும். காசூர் உதவியைப் பெற்றால், இப்போதே மாளிகையைப் பழுது பார்க்கலாம்.
சீ : பழைய பயத்தை மறந்து, இந்தக் காரியத்தைத் துவக்கவேண்டும்.