உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/136

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

என்ன செய்தாய், ஏது செய்தாய், என்று என்னைக் கேட்க! காங்கிரஸ் கட்சிக்குத் தந்தனர்!!” என்று பேசிக்கொண்டனர்.

தேர்தல் முடியும் வரையில் இந்தக் கருத்தை அடக்கத்துக்குப் பயன் படுத்தினர். பிறகு, ஆர்ப்பரிப்புக்குப் பயன்படுத்தினர். “நான் சாமான்யன்— எனக்காக ஓட்டுக் கேட்கவில்லை – மகத்தான காங்கிரஸ் கட்சிக்காக கேட்கிறேன்” என்று அடக்கமாகப் பேசி ‘ஓட்டு’ பெற்றனர் – பிறகு, “என்னய்யா இது, ஓயாமல் வந்து, என் பிராணனை வாங்குகிறாய், ஓட்டு போட்டேன் ஓட்டு போட்டேன் என்று சொல்லிச் சொல்லி, பாத்யதை கொண்டாடுகிறாய்! இதோ பார்! நீ, ஒன்றும் எனக்குப் போடவில்லை ஒட்டு! தெரிகிறதா? காங்கிரஸ் கட்சிக்குப் போட்டாய். ஆமாம். போய், உன் குறைகளைக் கட்சியிலே சொல்லிக்கொள் – போக்கும்படி சொல்லு—இங்கே வந்து என் உயிரை வாங்காதே, போ” என்று கடுகடுப்புடனும் பேசலாயினர். மக்களாட்சி கேலிக்கூத்தாக்கப்பட்டது. பெரும்பாலான தொகுதிகளில், பொதுமக்களுக்கு, ‘ஓட்டு’ பெற்றுக் கொண்டு போய், வெல்வெட்டு மெத்தைமீது உட்கார்ந்து கொண்டிருக்கும் ‘உயர்ந்தவர்களின்’ உருவம் கூடச் சரியாகத் தெரியாது! இப்படிப் பெட்டிக்குள் புகுந்து கொண்டு சட்டசபை சென்ற ‘பெருமான்களின்’ ஆட்சியிலேதான் நாடு இருக்கிறது.

கழைக்கூத்தாடி, நாம் நமது கழுத்து வலியெடுக்கும் விதமாகப் பார்க்கவேண்டிய அளவு உயரமுள்ள கம்பின்மீது ஏறிக்கொண்டு, ஆடிக்காட்டுகிறான் – கத்தி கொண்டு வயிற்றில் குத்திக்காட்டுகிறான். அதைக் காணும் நாம், கைகொட்டுகிறோம் சபாஷ் கூறுகிறோம் ஆச்சரியமடைகிறோம் அவன் திறமையை மெச்சுகிறோம்! அதுகேட்டு அவன், “என் திறமையைக் கண்டீர்களல்லவா! இப்படிப்பட்ட என்னை ஏன் நீங்கள் உங்கள் ஊர்த்தலைவனாகக் கொள்ளக்கூடாது!” என்று கேட்கமாட்டான்—கேட்கத் துணிந்தால் கம்பின்மீது ஏறி வித்தைபல செய்தவன், தரையின்மீது நிற்கவும் முடியாதபடி, புத்தி கற்பிக்கும் வித்தையில் மக்கள் ஈடுபடுவர்! வைத்தியத்தில் நிபுணர் ஒருவர் – ஆனால் அதற்காக அவரிடம் நோயாளியைக் கொண்டு போய்க் காட்டுவார்களேயொழிய, இடிந்த பாலத்தைக்காட்டி, இதை எப்படிப் புதுப்பிப்பது என்று