உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சிக் கடிதம் : 78

மலர் மணம்


★ கழக ஏடுகள் பயன் தரத்தக்க படைக்கலன்கள்!
★ சுமை அதிகம்; பாடும் அதிகம்!
★ நாட்டுக்கு எழில் ஆட்சிக்கு ஏற்றம் தருவது ‘காஞ்சி’!

தம்பி,

சிரித்திடும் முல்லையைப் பறித்திடும்போது, அதனைத் தன் உள்ளம் வென்ற எழிலுடையாள் ஏற்றுக் கொள்வாள், மணம் கண்டு மகிழ்வாள், எழில் எழிலுடன் சேர்ந்திடும் என்ற எண்ணம் கொள்ளாத காதலன் உண்டா?

வாளினை வடித்தெடுத்துக் கொடுத்திட உலைக் கூடத்தினில் பணி புரிவோன், இந்த வாள், வீரன் கரம் சேர்ந்து அக்கிரமத்தை வெட்டி வீழ்த்தப் பயன்படும், உரிமை காத்திடத் துணை நிற்கும் என்ற நம்பிக்கை பெற்றிடும்போது தானே, அவன் வேலைத்திறன் நேர்த்திமிக்கதாகும்?


அ. க. 7—2