இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
காஞ்சிக் கடிதம்: 79
தீமிதித் திருவிழா!
★ பிரிவினை கேட்போர்க்குத் தேர்தலில் நிற்க இடமில்லையாம்!
★ கோலோச்சிகளின் குறுக்கு வழிச் சட்டம்!
★ உதய சூரியன் நுழைவதைத் தடுத்திடச் சூழ்ச்சி!
★ குட்டு உடைந்தது! திட்டம் அழிந்தது! ஜனநாயகம் பிழைத்தது!
தம்பி,
அறிவூர் அறிவானந்தர் சொன்ன கதை இது.
இதிலே, மெய்யம்மை கருத்தப்பன், பவுனாம்பாள் வலைவிரித்தான், கோட்னடையூரான் கோலெடுத்தான், வாக்களிப்பார் தெளிவப்பன், நோட்டூரான், இருட்டூரான் என்போர் உளர்.
உதய சூரியன் கோட்டையூர் நுழைவதைத் தடுத்திடச் சூழ்ச்சி நடத்தப்படுவதும், அது முறியடிக்கப்படுவதும் கதையில் விளக்கப்பட்டிருக்கிறது.
மெய்யம்மையிடம் பவுனாம்பாள் தூபம் போட—வருகிற கட்டத்துடன் கதை துவங்குகிறது.