உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

32

இல்லே, இல்லே, அதெப்படி வருவா, அவதான், தீ மிதிக்கிற வழக்கத்தை விட்டுவிட்டதாச் சொல்லியாச்சே...

அதைத்தான் சொல்றேன்; தீமிதிக்கிறது பைத்தியக்காரத்தனம், அதாலே ஒரு பலனும் இல்லேன்னு ஊர் மூச்சூடும் பேசிக்கிட்டு இருக்கிற பவுனாம்பா, உன்னை ஏன் தூண்டவேணும், தீ மிதிக்கிற திருவிழாவுக்குப் போகச் சொல்லி —

அவபேர்லே குத்தம் கண்டு பிடிக்கறதா, நம்ம வேலை, நாம சொல்லிக்கொண்டு இருந்தமேல்லோ, தீ மிதிக்கிற திருவிழா வந்தா, போகப்போறோம்னு...

நாம சொன்னது நெஜந்தான் மெய்யம்மே! அதை நான் மறுக்கல்லே. நம்மை, தீ மிதிக்கிற திருவிழாவுக்குப் போகச் சொல்றதிலே என்ன அக்கறை, ஏன் அந்த அக்கறை தீமிதிக்கிறதை வெறுக்கிற பவுனாம்பாவுக்கு? அதுதானே புதிரா இருக்குது. நாம, வீட்டைவிட்டு, வெளியே போகணும் என்கிறதிலே அல்லவா பவுனாம்பாவுக்கு அக்கறை ஏற்பட்டிருக்குதுன்னு தோணுது.

உங்களுக்குத் தோணும், எதற்கும் ஒன்பதனாயிரம் சந்தேகம்.

மகிழ்ச்சியுடன் வீடு திரும்பிய பவுனாம்பாளை அவள் கணவன், வலை விரிப்பான் கண்டு மகிழ்கிறான்.

மெய்யம்மையிடம் பக்குவமாகப் பேசிக் காரியத்தைக் கச்சிதமாக முடிக்கிறாளோ இல்லையோ என்ற கவலையுடன் இருந்து வந்த வலைவிரிப்பான் பவுனாம்பாள் வெற்றிக்களை முகத்தில் ஆட வந்ததுகண்டு நடந்ததைக் கூறிடக்கேட்டு, பேசுகிறான்.

சந்தேகப்படவே இல்லையா, மெய்யம்மா, உன் பேச்சைக்கேட்டு,

சந்தேகப்படுகிறது போலவா நான் பேசுவேன்? எனக்கு என்ன பக்குவம் தெரியாதா, பழக்கம் கிடையாதா?

பவுனாம்பா! நீயோ இதுவரைக்கும், தீ மிதிக்கிற திருவிழாவுக்குப் போறது தப்புன்னு பேசி வந்திருக்கே...