63
கொள்வோம். ஆனால், மக்கள்? காங்கிரசின் காவலர்களாகத் தம்மைக் கருதிக்கொண்டுள்ளவர்கள் மேற்கொள்ளும் இத்தகைய செயலை, கண்ணியமானது என்றா கருதவார்கள்? மக்கள் அவ்வளவு இழிதன்மை கொண்டவர்கள் அல்ல!
தம்பி! நான், மக்களுடைய அந்தப் பண்பிலேதான் நம்பிக்கை வைத்திருக்கிறேன்; மிகுந்த நம்பிக்கை; அவர் சுளிடந்தான் முறையிடுகிறேன். மக்களிடம், அவர்கள் உணரும்படியான அளவிலும் முறையிலும் இந்த முறையீடு போய்ச் சேருமானால், அவர்கள் நீதியின் பக்கம் திரண்டெழுந்து வந்து நிற்பார்கள் என்று திடமாக நம்புகிறன். வரலாற்று ஏடுகள் எனக்குள்ள அந்த நம்பிக்கையை மேலும் வலுவுள்ளதாக்குகின்றன. ஆகவேதான். இந்தத் தொண்டு வெற்றிபெற, தம்பி! நீ உன்னை முழுக்க ஒப்படைத்துவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
சாதனைகள்! தம்பி! சாதனைகளை மதிப்பிடவேண்டுமானால், ஒரு கட்சி நடத்திக்காட்டிய சாதனைகளுடன் வேறோர் கட்சி நடத்திக்காட்டிய சாதனைகளை ஒப்பிட்டுப் பார்க்கவேண்டும்; அந்த இருகட்சிகளும் ஆட்சி நடத்தியநிலை இருந்திடவேண்டும்.
திறமை—வலிவு—செல்வாக்கு—அறிவு—பண்பு—எனும் எவைபற்றிய மகிப்பீடு போடுவதென்றாலும் குறைந்தது இருவர்களின் நிலையையாவது கணக்கில் எடுத்துக் கொண்டு, ஒப்பிட்டுப்பார்த்து, இவரைவிட அவர் திறமை சாலி, ஆனால், வலிவு இவருக்குத்தான் அதிகம் என்ற இந்த முறையில்தான் மதிப்பீடு தரமுடியும்; அதுதான் பொருள் உள்ளதாகவும் —பொருத்தமானதாகவும் இருக்கும்.
எடுத்துக்காட்டு வேண்டுமெனின் இதனைக் கூறலாம். இங்கிலாந்து நாட்டில் இன்று அரசாளும் தொழிற்கட்சியின் சாதனைகளை, முன்பு அரசாண்ட கன்சர்வெடிவ் கட்சியின் சாதனைகளுடன் ஒப்பிட்டுப்பார்த்து எந்தக் கட்சியின் சாதனைகள் சிலாக்கியமானவை என்று கண்டறிந்து கூறுவது.
இந்த வாய்ப்பு, பிறநாடுகளிலே உள்ளது போல் இங்கு இல்லை.