உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/73

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

65

அது எப்படியோ போகட்டும்; ஆனால், வேறு ஒரு கட்சியின் ஆட்சி ஏற்பட்டு, அப்போது கிடைத்திடும் சாதனைகளுடன் ஒப்பிட்டுப் பார்த்தாலொழிய காங்கிரசின் சாதனைகளைப் பற்றிப் பெருமிதத்துடன் பேசுவதிலே பொருள் இல்லை! ஆனால் பேசுகிறார்கள்!

“பயலே! என்னைப் போல மீசையை முறுக்கிவிட உன்னால் முடியுமா?” என்று கேட்டான் பக்கிரி; வயது நாற்பது; பனிரெண்டு வயது சிறுவனைப் பார்த்து.

“சித்தப்பா! எனக்கு இப்போதுதான் மீசை கருக்குவிடுகிறது! இதற்குள்ளே வம்பு பேசுகிறாயே! காலம் வரட்டும்! மீசை கொத்து கொத்தாக வளரும். அப்போது நான் முறுக்கிக் காட்டுகிறேன். அப்போது தெரியும், மீசையை முறுக்கிவிடுவதில், நம் இருவரில் யார் வல்லவர்கள் என்பது. இப்போது பேசி என்ன பயன்! ஆனால் சித்தப்பா! இதையும் தெரிந்து கொள். எனக்கு, முறுக்கிவிடும் அளவு மீசை வளரும் காலத்தில், உனக்கு உள்ளது உதிர்ந்து போய் விடும்” என்றான் சிறுவன் கதையில்!

நம்மைப் பார்த்துக் கேட்கிறார்கள், நாட்டு மக்களை விவரம் அறியாதவர்கள் என்ற நினைப்பில்—‘இதோ பார், காங்கிரசின் சாதனைகளை! காட்டு உன் சாதனைகளை!!! —என்று!

அட்சி என் கரம் வரட்டும், அப்போது நான் செய்தளிக்கும் சாதனைகளைக் காணலாம்; உன் சாதனைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம் என்று கழகம் கூறுகிறது. உடனே காமராஜர் கடுங்கோபம் கொண்டு, “மூஞ்சியைப் பார்! முகரக் கட்டையைப் பார்!” என்று பேசுகிறார். உலகிலே பாதி சுற்றிவிட்டாரல்லவா! அதற்கு அடையாளம் போல விளங்கும் உயர்த தரமான பேச்சு!!

இவர்கள் இந்த நினைப்புடன் இருப்பது மட்டுமன்றி, மக்களிடம் சென்று, நாடாள காங்கிரஸ் தவிர வேறு எந்தக் கட்சிக்கும் யோக்யதை கிடையாது என்று பன்னிப் பன்னிப் பேசி வருவதைக் கேட்ட பிறகுதான் நான் சென்னை சூளையில் நடைபெற்ற கூட்டத்தில் கேட்டேன், வேறு எந்தக் கட்சிக்கும் நாடாளும் யோக்யதை இல்லையென்றால், எதற்காக 8 கோடி ரூபாய் செலவிட்டு, பொதுத் தேர்தல் நடத்துகிறீர்கள் என்று. உடனே பத்து ஆண்டு-

அ. க. 7—5