67
இதெற்கென்ன சொல்லுகிறார்கள்? சாதித்தோம், சாதித்தோம் என்று சொன்னால் போதுமா? சாதித்திடும் திறமை இருந்தால் இவர்களைப் போலவே, ஏகாதிபத்தியப் பிடிப்பில் இருந்து விடுதலை பெற்று, சுதந்திர வாழ்வுபெற்று, ஆட்சி நடத்திய பல கிழக்கத்திய நாடுகள் பெற்ற வளர்ச்சியை ஏன் இங்கு பெற முடியவில்லை? திறமைக் குறைவு தானே காரணம்? பொருத்தமான திட்டம் இல்லாதது தானே காரணம்?
அந்த ஆய்வாளர்கள் கணக்கில் எடுத்துக் கொண்ட எந்த நாட்டிலாகிலும் போட்ட திட்டங்கள் ஏழைகளுக்குப் பலன் அளிக்கவில்லை; பணக்காரர்களுக்கே அந்தப் பலன் போய்ச் சேர்ந்தது என்று கூறிக் கைபிசைந்து கொள்கின்றனரா?
இங்குதானே,காமராஜரே கூறுகிறார், “ஆமாம்! திட்டத்தின் பலன் ஏழைக்குக் கிடைக்கவில்லை” என்று; வேறு யாரோ, திட்டத்தை நடத்தியது போலவும் இவர் வேறு மண்டலங்களிலே சஞ்சரித்து விட்டு இப்போதுதான் இங்குவந்திருப்பது போலவும்!!சமைக்கவே வ தெரியாதவள்; அவள் தயாரித்த சாப்பாட்டைச் சாப்பிட்டுச் சாப்பிட்டு, கணவன் சலித்துப் போனான்; முகத்தைச் சுளித்துக் கொண்டான். அப்போது அவள் சொன்னாளாம். “நான் சமைப்பது நன்றாகத் தான் இல்லை! எனக்கேகூடத்தான் பிடிக்கவில்லை. அதற்காக நான் உங்களைப் போலவா முகத்தைச் சுளித்துக் கொள்கிறேன்” என்று.
அது, கணவன் – மனைவி கதை! இவருமா அதுபோலப் பேசுவது?