78
என்று ஜப்பானியப் பத்திரிகையாளர் ஒருவர் புகழ்ந்து எழுதினார்—1963 டிசம்பர் 27ல்.
தத்துவப் பேராசிரியர், பெர்ட்ராண்டு ரசல், 1962 அக்டோபர் 28ல் இதுபோலப் புகழ்ந்துரைத்தார்,
இவ்வளவும், யாரைப்பற்றித் தெரியுமா, தம்பி! இன்று எல்லாம் இழந்து எவருடைய பார்வையிலும் படாமல் இருந்துவரும் குருஷேவ் பற்றி!
அதிபராக இருந்தபோது இத்தனை புகழ் மாலைகள்! இவ்வளவு புகழ் கிடைக்கும்போது நமக்கென்ன குறை, என்றென்றும் நாம்தான் அதிபர், நாம்தான் தலைவர் என்றுதானே குருஷேவ் எண்ணிக் கொண்டிருந்திருப்பார்!
அத்தனை புகழும், அவரைக் காப்பாற்றிற்றா? இல்லையே!
அத்தனை புகழ்மாரி பொழிந்தவர்களும், அவருக்கா இந்தக் கதி என்று ஒரு வார்த்தை கேட்டிட முன்வந்தனரா? இல்லையே!!
ஆகவே புகழ் பொழியப்பட்டால் போதும் நமக்கு. அசைக்க முடியாத நிலை என்றென்றைக்கும் உண்டு என்று யாரும் இருந்துவிட முடியாது: கூடாது.
பெறுபவர் நிலை எப்படியாயினும், ஒரு தலைவர் பெற்றுவிடும் புகழ், மக்களுக்கு, செவிக்கு உணவு; அதுவும் சிறிது காலத்துக்கு!
மக்கள், வாழ்வு கேட்கிறார்கள்; உழைத்து விட்டு!
கேட்பது ரொட்டி! கிடைப்பது கல்!—என்றார்கள் கவிக்குயில் சரோஜினி அம்மையார்.
புசித்திட மக்கள் உணவு கேட்கிறார்கள்; புகழ் புசித்து அவர்கள் வாழ்ந்திட இயலாதே!
அவர்கள் வாழ்வு கேட்கிறார்கள்; வண்ணப் படங்கள் அல்ல;!
படம் காட்டி, மக்களை, மயக்கிட முனைகிறார்கள்! நாமும் படம் எடுக்க முடியும் தம்பி! மக்கள் கண்டு