உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 20.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

காஞ்சிக் கடிதம் : 77

ஆழமான குழியாம்!


★ ஆழமான குழி! அறுபத்தேழாயிரம் அடி!
★ உள்ளத்தில் பட்டதை ஒளிக்காமல் சொல்கிறது கழகம்!
★ பலர் வாழச் சிலர் சாகலாம்!
★ கிளர்ச்சிகள் மூட்டிவிடப்படுவன அல்ல!
★ குழி பறிப்போன் குழியிலேயே வீழ்வான்!

தம்பி,

ஆழமான குழி; மிகமிக ஆழமான குழி—ஆயிரம் இரண்டாயிரம் அடி ஆழமல்ல, 67000 அடி ஆழமான குழி தோண்டப்போகிறார்களாம். சொல்லிவிட்டார்கள்! எவ்வளவு கஷ்டம் பாவம், இவ்வளவு ஆழமான குழிதோண்ட என்று எண்ணும்போதே எனக்குப் பரிதாபமாக இருக்கிறது.

பரிதாபம் காட்டுவது இருக்கட்டும். எதைப்பெற இவ்வளவு ஆழமான குழி தோண்டுகிறார்கள், விஞ்ஞான வளர்ச்சிக்குத் தேவைப்படும் ஏதாவது அரியபொருள் அத்தனை அடி ஆழத்திலே புதையுண்டு கிடக்கிறது என்பதற்காகவா என்று கேட்கிறாயா! தம்பி! அதற்காக அல்ல. நமக்காக, கழகத்தைப் போட்டுப் புதைக்க!! 67000 அடி

அ. க. 7—1