121
“உட்கார்! நீர் மெத்த சுறுசுறுப்பும் சூட்சமமும் உள்ளவர்! மந்திரிவேலை பாரும்!” என்றாராம். கிருஷ்ணப்பா இப்போது மந்திரியாகி, “பஞ்சமா? யார் சொல்வது, பொய்! பொய்!” என்கிறார். ‘விலை ஏறிவிட்டது, மக்கள் சொல்லொணாக் கஷ்டம் அனுபவிக்கிறார்கள்’ என்று முறையிட்டால், விலை ஏறினால் என்ன, தானாக இறங்கிவிடும்—என்று சமாதானம் பேசுகிறார்.
இதே முறையிலே காரியமாற்றும் பழக்கம் ஏற்பட்டுவிட்டதால், மத்திய சர்க்காரின் போக்கை எவரேனும் கண்டிக்கக் கிளம்பினால், அவர்களை, ஆசைகாட்டி, மடக்கிவிடலாம் என்ற நம்பிக்கை, டில்லிக்கு இருக்கிறது.
குறை கூறியும், கண்டனக் குரல் எழுப்பியும், உரிமை முழக்கமிட்டுக்கொண்டும், வெளியே தலைநீட்டுகிற காங்கிரஸ் தலைவர்களிலே பலரும், தமது திருவும் உருவும் டில்லிக்குத் தெரிந்து, ‘தூது’வராதா என்ற ஆசையினால் உந்தப்பட்டும், என்னை இப்படியே நீங்கள் வாளா இருக்கவிட்டுவிட்டால், வேறு வேலை இல்லாத காரணத்தாலும், அலட்சியப்படுத்திவிட்டார்களே என்ற எண்ணத்தாலும், நானும் ஏதாவது செய்யமுடியும் என்பதைக் காட்டித் தீரவேண்டிய அவசியத்தினாலும், மத்திய சர்க்காரின் போக்கை எதிர்த்துப் பேசக் கிளம்புவேன்—என்று டில்லிக்கு மிரட்டல் பாணம் ஏவ, இந்தப் போக்கினைக் கொள்கிறார்கள்.
இல்லையென்றால், மத்திய சர்க்கார் ஆதிக்கம்செய்கிறது, இது நியாயமல்ல, நல்லதல்ல; ராஜ்ய சர்க்காரின் தரமும் திறமும் கெட்டுவிடுகிறது என்று கூறிடும் அனுமந்தய்யாக்கள், நெஞ்சார இதை உணர்ந்து, நேர்மைவழி நின்று இதனை எடுத்துரைக்க முன்வருகிறார்கள் என்றால், இதற்குப் பரிகாரம் கூறவேண்டாமா? மக்களின் ஆதரவினை, இந்தத் தம் கருத்துக்குத் திரட்டிக் காட்டவேண்டாமா? நாட்டுக்கான சட்டதிட்டங்கள் குறித்து, கலந்து பேசி முடிவெடுக்கும், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிகளிலே, இதுபற்றி, அச்சம் தயை தாட்சணியத்துக்குக் கட்டுப்படாமல் எடுத்துரைக்க வேண்டாமா? நேரு பண்டிதரிடம் வாதாடவேண்டாமா? செய்கின்றனரோ? இல்லை! வாய்ப்புகள் கிடைக்கும்போதெல்லாம் வாயடைத்து இருந்துவிடுகிறார்கள்; மத்ய சர்க்கார் என்ற முறையே இத்தகைய கொடுமையை, எதேச்சாதிகாரத்தை, சர்வாதிகாரத்தைத்தான் மூட்டிவிடும். எனவே, தனியாட்சியாக ராஜ்யங்கள் இருத்தல்வேண்டும், ஒன்றுக்கொன்று நேசமாகவும் பாசத்துடனும், தோழமையுடனும் இருக்க வழிசெய்துகொள்ளலாம். ஒற்றுமையின்
அ.க. 4 — 8