உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/16

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

14

என்னாலும் முடியவில்லை!! காமராஜர் நல்லவர். ஆகவே, இப்போதைக்கு, காங்கிரஸ் ஒழிப்பு வேலையை நிறுத்திவைக்கலாம் என்று வாதிட முடிகிறது அவர்களால். நமக்கோ அந்த வாதம், மயக்கமளிக்கிறது.

காரணம் காட்டும்போது, கசடனே! நீ, பழங்காலப் பேச்சையே, புட்டுப்புட்டுக் காட்டிக்கொண்டு கிடக்கிறாயே, சரியாகுமா? நல்லவர் நம்மவர் என்று பெரியாரால் பரிவுடன் அழைக்கப்படும் பேறு பெற்றவர், காமராஜர், ஆட்சி புரியக்கண்டு உளம்மகிழ்ந்தோம், அவருடைய ஆட்சித் திறமையால் ஏற்பட்ட நன்மைகள் பலப்பல, மறுபடியும் அவர் ஆட்சி ஏற்படின் இன்னும் எண்ணற்ற நன்மைகள் கிடைத்திடும்—எனவேதான், இப்போது ‘புதிய போர்முறை’ வகுத்திருக்கிறோம்—நீ சுத்தக ‘கர்நாடகமாக’ இருக்கிறாயே, எப்போதோ அவர் சொன்ன அந்தப் பழைய விஷயத்தைக் கிளறிக் கொண்டிருக்கிறாயே, இப்போது புதிய நிலைமை, புதிய காரணம், எனவே புதியமுறை, இதனைப் புரிந்துகொள் என்று சிலர் கூறிடக் கேட்டிருப்பாய்.

காரணம் என்ன கூறப்பட்டாலும், கடமையிலிருந்து துளியும் தவறாதே! துரோகம் இழைக்காதே!—என்று பெரியார் எச்சரித்திருக்கிறார்—மிகுந்த கோபத்துடன், சாபமிடுவதுபோலப் பேசியிருக்கிறார்—அது என் நினைவிலே நின்று, வாட்டுகிறது, வதைக்கிறது, தவறி நடக்காதே என்று எச்சரிக்கை செய்கிறதே, நான் என்ன செய்யமுடியும்.

நாட்டுக்குத் துரோகம் திராவிட மக்களுக்குத் துரோகம்
தகப்பன், தாய்,பெண்டு பிள்ளைக்குச் செய்யும் தீங்கு

எது? காங்கிரசுக்கு யாராவது ஒரு ஓட்டு போடுவார்களானாலும் கூட, இத்தனை ‘பாபமும்’ பற்றிக் கொள்ளும் என்று பெரியார் கூறியிருக்கிறார்.

காரணம் கூறினால், போதாது என்கிறார்.

ஒரு ஓட்டுப்போட்டாலும் கெட்டுவிடும் காரியம்—துரோகிப் பட்டியலில் உன் பெயர் இடம்பெற்றுவிடும் என்கிறார்.

அவர் கூறும் அறிவுரை முழுவதையும், கேள், தம்பி, கேள்.

“ஒவ்வொருவரும் எந்தக் காரணத்தை முன்னிட்டும் காங்கிரஸ் பெட்டியில் ஓட்டுப் போடாமல் பார்த்துக் கொள்ள-