17
எப்படிப்பட்டவர் என்பதுபற்றி விடுதலையில் ‘விமசர்னம்’ வெளிவந்தது. அதையும் கொஞ்சம் பார்—அவர்களிலே பொறுமைசாலிகள் கிடைத்தால் பார்க்கச் சொல்லு;
நாடாரின் வாய்ப்புக் குறித்து கேட்டேன், இதற்கு ஒரு குடிமகன் கூறியதாவது—
காங்கிரஸ் தலைவர் காமராஜ நாடாருக்கு இங்கு செல்வாக்கில்லை. அவர் எங்கு சென்றாலும் யாரோ என்று மக்கள் அலட்சியமாகக் கருதுகினறனர்.
அவருக்கு அரசியல்பற்றி மூலாதார அறிவே கிடையாது.
“நாடாரால் அரசியல் சூழ்ச்சிகள்தான் நாம் தெரிந்துகொள்ள முடிந்தது. போதும் அச்சூழ்ச்சிகள்”
“முதலமைச்சராயிருந்த கண்ணியமான அரசியல்வாதியான ஓமந்தூர் இராமசாமி ரெட்டியாரை மேற்படி பதவியிலிருந்து நீக்கியதற்கு நாடார்தான் பொறுப்பாளி. அவ்வாறு இருக்க, நாடாருக்கு ஏன் நாங்கள் எங்கள் வாக்குகளை அளிக்க வேண்டும்”
“நாடாரைப் போன்ற சுயசாதிப் பித்தரைப் பார்க்க முடியாது. சுய சாதியிலும் தமக்கு வேண்டிய நண்பர்களுக்கே சலுகை காட்டுவார். எனவே நாடார்களிலே பெரும்பாலோர் அவருக்கு எதிராகவே இருப்பர்”இருக்கலாம்! திருவில்லிபுத்தூர் தேர்தலின்போது காமராஜரின் குணாதிசயம் அவ்விதம் இருந்திருக்கலாம் - பிறகு அவர், படிப்படியாக, மெல்ல மெல்ல, நல்லவராகி விட்டிருக்கக்கூடாதா, என்று கேட்கத் தோன்றும் தம்பி, அந்த ஆராய்ச்சியும் சிறிதளவு செய்தே பார்த்துவிடுவோமே, அதிலென்ன கஷ்டம்.