உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 4.pdf/191

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

189

சுவிட்சர்லாந்து நாட்டு நிபுணர்களுக்கான வீடுகள் கட்டி முடிக்கப்பட்டன!

சுவிட்சர்லாந்து நாட்டிலிருந்து இயந்திரக் கருவிகள் வருவதற்கான ஏற்பாடு முடிந்துவிட்டது.

கிராம்ப்டன் கம்பெனியார் மின்சார சம்சார சம்பந்தமான இயந்திரங்களை அனுப்பிவைத்துவிட்டனர்.

தொழிற்சாலை அமையும் இடத்தருகே வசதிக்காக இரயில்லே இலாகாவினர் விடுதி அமைத்தளித்துவிட்டனர்.

குடிதண்ணீர் வசதிக்காகப் பெரிய கிணறுகள் தோண்டப்பட்டாகிவிட்டன.

தொழிலாளருக்கான விடுதிகள் கட்டுவதற்கான திட்டம் தயாராகி வேலை துவங்கிவிட்டது.

தொழிற்சாலையின் தேவைக்காகவென்றே, பாளையங்கோட்டையிலிருந்து தூத்துக்குடி வரையில் புதிய பாதை அமைக்க ஏற்பாடாகி வேலை நடந்தேறி வருகிறது.

தம்பி! இந்த ஒவ்வொரு வேலை துவக்கப்பட்டு நடந்தேறியபோதும் தொழிற்சாலை நடத்தவேண்டுமென்று திட்டமிட்டவர்களின் மனதிலேயும், தொடர்புகொண்டவர்களின் மனதிலேயும், எத்தனை ஆசை ஊறியிருக்கும்:

வேலையற்ற மக்களில் எத்தனை ஆயிரம் பேர், இந்தப் புதிய தொழிற்சாலை எழுவது கேட்டும் கண்டும், இனித் தங்கள் கஷ்டம் தீரும் என்று கருதியிருப்பர்.

ஆனால், தம்பி! 1953-ல் மைசூர் மகாராஜாவால் துவக்கப்பட்ட இந்தத் தொழிற்சாலை, இப்போது எந்த நிலையில் இருக்கிறது தெரியுமா? 1956 செப்டம்பர் திங்களில், துயரகீதம் பாடுகிறார்கள்!

துரோகம்! வஞ்சகம்! நம்பவைத்துக் கழுத்தறுப்பது! நம்பினோரை நட்டாற்றில் தள்ளுவது! தூங்கும்போது கல்லைத் தூக்கித் தலையில் போடுவது!—என்று பலப்பல கூறப்படுகிறதே, இந்தத் தொழிற்சாலை சம்பந்தமாக நடைபெற்றுள்ள சம்பவம், இவைகளை எல்லாம் தூக்கி அடிப்பதாக இருக்கிறது.

கனரகத் தொழிலுக்குத் தேவையான ரசாயனப் பொருள்களைத் தயாரிப்பதற்காக ஒரு கோடி ரூபாய் மூலதனத்துடன்