108
கொண்ட வண்டுகள் இசை பயிலும்! கோலேந்தும் மன்னனது கூடம்தனில் வீரர் வந்தமர்ந்து வாழ்த்தொலிக்கும் வேளையிலே, வந்து நின்று! அவையோரின் அஞ்சலிதனை ஏற்கும் அரசகுலம் இவள் காணீர் எனும் விதமாய் வருகின்றாள்.
நாளைக்கு இருவேளை காளையைக் குளிப்பாட்டிப் பாதுகாத்திடச் சொன்னார் பரிவுமிகு என் தந்தை! அதற்கே நான் வந்தேன்! என்று கூறுகின்றான்; இவனை யார் கேட்டார்கள்? மலர்நாடி வந்திடும் வண்டினை எவர் கேட்பர்? கூறுகின்றான் குமரன், வேறேதும் அறியானாம்! வேல் விழியைக் காணானாம்! கழுத்தைக் காலென்றும், காதினை கண்ணென்றும் தவறாக எண்ணியன்றோ தன் வேலை செய்கின்றான்! காளையும் வாய்விட்டுச் சிரித்துக் கேலி செய்யும் இவன் போக்கை அறிந்ததனால்!
நெற்றியிலே! பூத்திட்ட முத்துக்களைத் தரைமீது, தையல் வீசுகிறாள். இவனுக்குத்தான் அதனால் எத்தனை தவிப்பு!! கல்லோ அவர் மனமும், கன்னிக்குக் கடினமிகு வேலை பல தந்திட்டார்! மலருக்கு அனல் காற்று! ஆகுமோ? கருகாதோ! மானை ஏர்தனில் பூட்டி, மதியிலியும் உழுதிடானே! மங்கை இவள் வியர்வை மண்ணில் விழும் அளவு, பாடுபடச் செய்கின்றார்; பாவிகள்; பெற்றோராம்!!—என்றெல்லாம் கேட்டிடத்தான் துடிக்கின்றான்; அவன் நினைப்பை, கண்ணோரம் தன்னால் கண்ட அவள், ‘களுக்’கெனச் சிரித்திடாமல், அடக்கிக் கொண்டதுதான் விந்தை!
மாடோட்டி வந்தவனே! மன்னாரின் மகன்தானே! சின்னான், உன் பேர்!— ஆமாம் சிலம்பத்தில் வல்லவனாம்; சொன்னார்கள் பலபேர்கள்! வயலூர் தோப்பினிலே, வகையான பலனாமே! ஆயிரத்துக்கு மேலே இலாபமாம் இவ்வாண்டு; உண்மைதானே! கால்காசும் செலவழிக்காக் கஞ்சன் மகன் என்றாலும், பசியோடு வந்தவர்க்கு பரிந்து உணவளிப்பாயாம்! பாமாலை தொடுப்பாயாம். பன்னிருகையன் சொன்னான்! ஆமாம் உனக்கு இன்னும், ஆகவில்லையே, மணமும்! அத்தைக்கோ மகள் இல்லை! சொத்தைப் பல்லாம், சொக்கிக்கு! உன் அக்கா மகள்! எவள் வந்து உன் மனையில் எழில்கூட்டி நிற்பாளோ! இனியா பிறக்க வேண்டும்! இருப்பாள் பருவமங்கை! ஏடா! குறுநகையோ? பல்போன கிழவனுக்குப் பாவை கதை தெரிவதுண்டோ என்றெண்ணிப் பரிகாசம் செய்குவாயோ!! பழுத்துள்ள நானும் முன்னம் ‘பிஞ்சாக’ இருந்தவனே! ஆனால், இதனைக் கேள்: அங்கும் இங்கும்