உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/156

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

156

பொருள் என்ன கொண்டுவந்தாய் என்று பொருள் நிறைச் சிரிப்பைக் காட்டிக் கேட்டிடத் தம்பி உண்டே! பொருளாளர்! எனவே பொருளும் சிறிதளவு பெற்றுப் பெரிதும் நான் மகிழ்ச்சியுற்றேன். எங்கும் நான் கண்ட காட்சி, எவர் உள்ளமும் மகிழும் வகையே! கோவை மாவட்டந்தனில், கோபமோ இவர்க்கு என்று எவரும் எண்ணிடும் வகையிலே காணப்படுவர், கொள்கை காப்போர். உடுமலை நாராயணனுடன், பொருள் பெறத்தக்க நல்ல புன்னகை முகத்தில் காட்டிப், பொறுமையை அணியாய்ப் பூட்டித் தொண்டாற்றிடும் இளைஞர் தேவசகாயம் கூடி, எனை அழைத்துச் சென்ற ஊர்களின் எண்ணிக்கை மறந்து போனேன்—எங்கும் நான் கண்ட ஆர்வம் என்றுமே மறப்பேன் அல்லேன். ஆங்கொரு சிற்றூர், தம்பி! உடுமலைப் பகுதி! ஆமாம்! பகலிலே ஊர்வலம்! பரிவு நிழலளிக்க, பாசம் உடனிருக்க, பல்லோர்கள் வந்தார்கள், மேடைநோக்கி. நானிருந்த வண்டி நகர்ந்தது, ஓடோடி ஓடவில்லை. வந்தார் தோழர்! ஒருகணம் அண்ணா! என்றார்! நான் இந்த ஊர்க்கழகத்தின் பொறுப்பாளன், இதனைக் கேளும், “அண்ணனைக் காண ஓடிவருகிறாள் என் துணைவி, அண்ணா! நின்று ஓர்கணம், அன்னாளின் அஞ்சலி ஏற்றுக்கொள்ளும் என்னுடைய துணைவி யாரோ என்று எண்ணிட வேண்டாமண்ணா! சென்னையம்பதியிலுள்ள செல்வி அனந்தநாயகியின் தங்கையே எந்தன் தாரம்!” என்று கூறுகின்றார். வந்த மங்கையும் வணக்கம்கூறி, செண்டுகைக் கொடுத்துவிட்டுச் சென்றிடக் கண்டேன்—என்ன இவ்வன்பு வெள்ளம், இத்துணை வேகமாக, எங்கெங்கும் கொழிக்கின்றதே என்று எண்ணிப், பெருமிதம் கொண்டேன், தம்பி!

இவ்விதமாகவெல்லாம் இணையில்லா இன்பம், அன்பு. ஈட்டி என்முன்னம் கொட்டி, எடுத்தேகு அண்ணா என்று எண்ணற்றோர் கூறும்போது, பண்டிதர் பதைபதைக்கப் படுகளம் ஆவதெனினும் பார்க்கிறேன் ஒருகை என்று பண்பற்றுப் பேசும் பேச்சு, எனக்கென்ன கலக்கந்தனையா, ஏற்படுத்திட இயலும்? வெறும் கேலிக் கூத்து! பாரெலாம் பஞ்சசீலம் பரவிட வேண்டுமென்று நாநலமிக்க பேச்சுப் பேசிடும் பண்டிதர் நேரு போரில்லை பொறுப்பற்றதோர் போக்கோ செயலோ இல்லை, போற்றிடுகின்றோம் நாட்டை மீட்டிட உறுதிகொண்டோம், அறநெறி நின்று கூறிடும் நம்மை நோக்கி, உள்நாட்டுப் போரும்கூட மூண்டிடுவதாயின், நான், உமக்கொரு நாடு தாரேன், உறுதி, இது அறிவீர் என்று