158
ஆஜம் வெற்றியுடன் கண்டார். பாகிஸ்தான் கண்டோம்!! உள்நாட்டுப்போர் மூண்டிடட்டும் ஒருபோதும் பாகிஸ்தானுக்கிணங்கேன்; உறுதி! காந்திமேல் ஆணை! என்று கூறினார், அறிவாயா! என்று கேட்டுச் சிரித்தார் ஜின்னாவும்.
அந்தப் போக்கு இம்மிகூட மாறிடக் காணோம்; அனுபவம் பாடம் தருமாம்; அது இங்கு தென்படக் காணோம்.
அணுகுண்டு யுகத்தினிலே ஆகுமா பாகிஸ்தான், தனிநாடு? என்று ஆர்ப்பரித்தார் பண்டிதர். கொண்ட கொள்கையை மாற்றிடவோ, கோணல் பாதை புகுந்திடவோ, கோல்கொண்டோர் முன் குதித்தாடிப் பண்டமும் பழமும் பெற்றிடவோ, சிற்றறிவினரா ஜின்னாவும்? சீரழிக்கவா அவர் வந்தார்? பாகிஸ்தான் எம் பிறப்புரிமை; அதனைப் பெற இயலாதேல், கபுர்ஸ்தான் எம் இருப்பிடமாய், ஆகட்டும்; கவலை இல்லை, எனக் கர்ஜித்தார்! காங்கிரஸ் குரலை மாற்றிற்று.
தம்பி! அது வேறு காலம், என்று கூறுவார் உளர். பிறிதோர் சமயம் அதுபற்றி என் கருத்தைத் தெரிவிக்கிறேன். இப்போது, இது விளக்கமாகிவிட்டதல்லவவா!
கழக வளர்ச்சி வேகமுடன்,
காணுமிடம் எங்கும் எழுச்சி,
எழுச்சியின் அடிப்படை நெஞ்சநெகிழ்ச்சி,
நெகிழ்ச்சிக்குக் காரணம், பாசம், பற்று,
பாசம் பற்று இல்லை வேறு எவ்விடமும்.
அவ்விடமெல்லாம் வெறும் வியாபாரம்.