உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/188

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

188

வகுப்புவாதிகள்
சிண்டுபிடித்திழுப்போர்
செயலாற்றாதார்
கொள்கை அறியாதார்

என்ன அண்ணா இது! காங்கிரஸ்காரர்களைக் கடுமையாகத் தாக்கக் கூடாது, கேவலமாகப் பேசக்கூடாது, தூற்றக்கூடாது என்றெல்லாம் எங்களுக்குக் கூறிவிட்டு, நீ! காங்கிரஸ்காரர்களை இவ்வளவு கடுமையாகக் கண்டித்துப் பேசுகிறாயே,

இடந்தேடிகள்
பணம் பிடுங்கிகள்

என்றெல்லாம் கேவலமாகப் பெயரிட்டு அழைக்கிறாயே, என்று தானே, தம்பி, கேட்கிறாய். நியாயமான கேள்வி. விளக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்.

இடந் தேடிகள்
பணம் பிடுங்கிகள்

என்பவைகள், கடுமையான வார்த்தைகள், கேவலமான சொற்கள், இழிமொழிகள். இல்லை என்று கூறவில்லை. ஆனால் இப்படிக் காங்கிரஸ்காரர்களைத் தூற்றும் நிலைக்கு நான் கீழே இறங்கவில்லை; இறங்கவும் மாட்டேன். இப்படியெல்லாம் பெயரிட்டு அழைக்கத் தக்கவிதமான கண்டனத்தை. கடுமொழியை, காங்கிரசார்மீது நான் வீசவில்லை. வீசியவர், விவரம் தெரியாதவரும் அல்ல; காங்கிரசுக்குப் பகைவரும் அல்ல; எதுவோ கிடைக்குமென்று எதிர்பார்த்து ஏமாற்றமடைந்து எரிச்சல் மூட்டப்பட்டவருமல்ல; நல்ல நிலைமையிலே உள்ளவர்; தரம் உயர்ந்தது; பதவி உயர்வானது: ஆராய்ந்து பொறுப்புணர்ச்சியுடன் பேசக்கூடியவர்; பண்டித ஜவஹர்லால் நேருவின் நேரடியான நிர்வாகத்திலே உள்ள வெளிநாட்டு விவகாரத் துறையிலே பொறுப்பேற்றுள்ளவர்; நேருவுக்குத் துணையாக இருப்பவர்; துணை அமைச்சர்; இலட்சுமி மேனன் அவர்களின் பேச்சிலே இருந்து எடுத்தவைகளே,

இடந்தேடிகள்
பணம்பிடுங்கிகள்