இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
202
முனியன் :–
அய்யா சொன்னார் அதைக்கூட.
அதனால் பாதகமில்லை யென்று
அடித்துப் பேசினார் பெரியவரும்.
மண்டலக் காங்கிரஸ் தலைவரடி!
மந்திரிக்கும் அவர் சொந்தமடி!
கதரும் கட்டிப் பழக்கமில்லை
கண்ட பயல்களைக் காண்பதில்லை!
கண்டிப்பான பேர்வழி நான்
என்றும் சொன்னார், எஜமானர்.
முத்தம்மா :–
அய்யா சொன்னதைக் கேட்டபின்பு!
முனியன் :–
மெய்யாத் தாண்டி, எல்லோரும்
மேதையின் பேச்சிது என்றார்கள்!
முத்தம்மா :-
ஐய்யே! இது அனியாயம்
அடிப்பவர் கொள்ளை பல தொழில்
அதை அனைவரும் அறிவார் தெளிவாக
அன்பும் அறமும் அவர் அறியார்
அழுத கண்ணைத் துடைத்தறியார்
எரிந்து விழுவார் எவரிடமும்
எவருக் கிவரால் உபகாரம்?
சத்திரம் சாவடி கட்டினாரா?
சாலைகள் சோலைகள் அமைத்தாரா?
சாத்திரம் பலபல கற்றாரா?
சான்றோருடன் சேர்ந்துழைத்தாரா?
சட்டம் திட்டம் அறிவாரா?
சட்டசபையில் நின்று உரைப்பாரா?
சஞ்சலம் துடைத்திட வல்லவரா?