உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:தம்பிக்கு அண்ணாவின் கடிதங்கள் 9.pdf/207

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

207

பாதை வழுவாது பணிபுரிவோம்
பாட்டாளியின் அரசு அமைப்போம்

ஏழையை வாட்டும் விலைவாசி
முதுகை முறிக்கும் வரிச்சுமைகள்
எதிர்ப்போம் குறைப்போம் உமதருளால்!

செல்வம் சிலரிடம் சிக்குவதும்
செத்திடும் நிலையில் மிகப்பலரும்

உள்ள கொடுமை களைந்திடுவோம்!
உறுதி தளரோம்! இது திண்ணம்!
இம்முறை செய்திட அலுவல்கள்
ஏராளம் — குவிந்திருக்குது.

தொண்டுகள் புரிந்திட அனுமதிதந்து

எமை வாழ்த்துவீர், தோழர்காள்!
திருவிடம் விடுபட! தீமைகள் பொடிபட!

தி.மு.க. தொண்டு
நாட்டுக்கு என்றும் உண்டு!

தம்பி! இதை நாடெங்கும் உள்ளவர்கள் அறிந்திடச் செய். —பார், பிறகு, எங்கெங்கும், ஆதரவு பெருகி, வருவது காண்பாய். காங்கிரசாட்சியின் கேடுபாடுகளை மக்கள் அறியாதிருக்கிறார்கள் —பொருளை வாரி இறைத்து ஓட்டுப் பெற்றுவிடலாம் என்று மனப்பால் குடிக்கிறார்கள், மமதையால் நிலைமையை உணர மறந்துவிட்ட காங்கிரஸ் பெருந்தலைவர்கள். ஆனால், மக்கள் ஏமாளிகளுமல்லர், மனதிலே உள்ளதை அப்படி அப்படியே கொட்டிக்காட்டும் பழக்கமும் அவர்களுக்குத் தெரியாது. நல்ல தீர்ப்பளிக்க அவர்கள் தவறமாட்டார்கள் என்பதை நான், நாடு சுற்றி நித்தநித்தம் கண்டு வருகிறேன். எங்குச் சென்றாலும், மக்கள் முகத்திலே ஒரு ஏக்கம் — வார்த்தைகளிலே துக்கம்— வாழ்விலே தடுமாற்றம்— இவைதான் தென்படுகின்றன. பொறுப்புணர்ச்சியும் பொறுமைக்குணமும் மிகுந்தவர்களாக நம் நாட்டு மக்கள் இருப்பதனால் மட்டுமே, இவ்வளவு அலங்கோலம் நாட்டிலே நெளிந்து கொண்டிருக்கும் நிலையிலேயும், புரட்சி இங்கு