227
இதற்காகத் தம்பி! காங்கிரஸ்காரர்கள் கட்டிவிடும் புகார்கள், இட்டுக் கட்டிடும் பேச்சுக்கள், உலவவிடும் வதந்திகள். கொஞ்ச நஞ்சமல்ல.
ஏற்கனவே தோற்றுப்போன இடங்களிலே, காங்கிரசார் செய்துவரும் பிரசாரம்!
தொகுதிகள் சீர்பட வேண்டுமானால், காங்கிரசுக்கு ஓட்டுப் போடவேண்டும்.
காங்கிரஸ் வெற்றிபெற்ற தொகுதிகளிலேதான் வசதிகள் பெருகி உள்ளன.என்கிற முறையிலே இருக்கிறது. இது மேடைப் பேச்சாக அல்ல, திண்ணைப் பேச்சாக நடக்கிறது.
மக்கள் இதைக் கேட்டு மிரளுவார்கள் — ஐயய்யோ! நமது தொகுதி பாழாகி விடுமாமே—காங்கிரசுக்கு ஓட்டுப் போடா விட்டால், என்று பீதி அடைவார்கள். அந்தச் சமயமாகப் பார்த்து, ஓட்டுகளைப் பறித்துக் கொள்ளலாம் என்ற நப்பாசை கொள்கிறது, நாடாளும் காங்கிரஸ் கட்சி.
அதிலும், இந்தப் பிரசாரத்தைக் கிராமத்து மக்கள் எளிதாக நம்பிவிடுவார்கள்; நமக்கு எதற்கு அரசியலும் கட்சிகளும்; ஏரி சீர்பட வேண்டும், எரு எருது கிடைக்க வேண்டும், உரம் உப்பு கிடைக்கவேண்டும். வீடுவயல் தழைக்க வேண்டும், பாதை பாலம் இருக்கவேண்டும், இவைகளை நாம் அடையாமலிருப்பது காங்கிரசை ஆதரிக்காததால்தானாம், ஏன் நாம், எதிர்க் கட்சிக்கு ஓட்டுப்போட்டு, நமக்கு வரக்கூடியதை இழக்கவேண்டும்; காங்கிரசுக்கு ஓட்டுப் போட்டு வசதிகளைப் பெற்றுக்கொள்ளலாம் என்று கிராமத்தார்கள் நினைப்பார்கள், என்று நம்புகிறது காங்கிரஸ் கட்சி. தம்பி ! இந்த எண்ணம் தவறு என்பதைக் கிராமத்து மக்களுக்கு மட்டுமல்ல, நகரத்து மக்களுக்கும், நாம் விளக்கியாக வேண்டும். ஒரு விளக்கம் தருகிறேன். அதனை மேலும் விரிவுபடுத்தி, நாட்டினருக்கு எடுத்துக் கூறும் பொறுப்பு, உன்னுடையது.
“நான் வாழும் பிரதேசம் மலைப்பிரதேசம். அந்த மலைப் பிரதேசம் நாலாயிரம், ஐயாயிரம் அடிக்கு மேல் உள்ளது. அங்கு தேயிலைத் தொழில் சிறந்த தொழிலாக