50
அறைகூவல்
வண்ணமுகப்பு, வரவேற்பு வளைவுகள் கண்ணைக்கவரும் கவர்ச்சியுடன்!
நிழலது தந்து நம் நிலையினை உணர்த்தும் பெரியதோர் பந்தல், அமர்ந்திருந்து அரிய உரைகள் கேட்டிட!
வரிசை வரிசையாகக் கடைகள்! புதியதோர் அங்காடி!
உலவி மகிழச் சாலைகள்! உண்டு களைப்பாற விடுதிகள்! மகிழ்வூட்டும் கலையரங்கம்! கருத்தூட்டும் கண்காட்சி!
இன்பத்திராவிடம் பெற்றிட வாரீர் என இருவண்ணக் கொடிகள் ஆடி அழைத்திடும் அழகுறும் காட்சி!
விடுதலைப் போருக்கான அழைப்பு வந்திடுங் காலை வீறுகொண்டெழுந்திடப் போகும் வீரர்தம் கூட்டம் உலா வரும் காட்சி!
இவை எலாம் உமக்காக!
உமது உழைப்பு நாட்டுக்காக!
திருப்பரங்குன்றம், மாநாடுமட்டுமல்ல; நமது இன மனமகிழ் மன்றம்!
திருப்பரங்குன்றம், ஆட்டிப்படைக்கும் வடவருக்கு அறை கூவல்!
அடுத்துக் கெடுத்திடும் நினைப்பினர்க்கு, எச்சரிக்கை!
விட்டுச் சென்றவர்கட்கு, அறிவுரை!
வீரர் குழாத்துக்கு அழைப்பு!
திருப்பரங்குன்றம், பொறுப்புணர்ந்தோர்க்கு!
அகமும் முகமும் மலர
பகற்கனவு என்றார் பண்டிதர்! பாதந்தாங்கிகளும் அதனையே கூறுகின்றனர்! ஏன் கூறினர் அதுபோல்? நாம் எதிர்ப்புக் கண்டு அஞ்சுவோம், ஏளனம் கேட்டுத் துஞ்சுவோம், பழிச்சொல் கேட்டுப் பதறுவோம், பயணம் தடைப்படும் என்று