இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கடிதம்: 137
புதுப் பா!
திராவிடர் உரிமை—
தனி அரசு—
தமிழ்நாடு பிரச்சினை.
தம்பி!
“ஒரு பெண் கற்போடு இருப்பது இலாபமா? கற்பிழந்தவளாக இருந்தல் இலாபமா? என்று யாரும் கேட்கமாட்டார்கள். ஒரு பெண்ணின் கற்புக்கு எப்படி விலையில்லையோ அதுபோல ஒரு நாட்டின் சுதந்திரத்திற்கும் விலையில்லை.”
அதுசரி, அண்ணா! நாடு விடுதலைப் பெறவேண்டும் என்பதனை அழுத்தந்திருத்தமாகக் கூறவேண்டியதுதான் மரமண்டைகளுக்கும் புரியும்படி; ஆனால் விலகியோர் கூறுகிறபடி, எதற்காக அண்ணா! பால் உணர்ச்சி உள்ள பேச்சுப் பேசுகிறாய்?— என்றுதானே, தம்பி! கேட்கிறாய். இது, என் பேச்சு அல்ல! விலகியோரில் ஒருவரின் பேச்சு! சட்டசபை உறுப்பினர்! அமைதியாகப் பேசுபவர். அவருக்கே மனம் குமுறி, புதுவை மாநாட்டிலே, பேசினார் இதுபோல!
ix.—1