பக்கம்:தம்பியர் இருவர்.pdf/105

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

"நேர்மயிைன் ஆணி'

இராமனும் பரதனும்

இராமனும் அவனுடைய தம்பியர் மூவரும் ஒரே நாளில் சற்று முன்னும் பின்னும் பிறந்தவ ரேயாவர். எனவே, அவர்களுள் பெரியவன் சிறியவன் என்ற வேறுபாடு பெரிதாகக் கூறுவ தற்கு ஒன்றுமில்லை. இவ்வாறு இருந்தும், சில நாழிகை முன் பின்னாய்ப் பிறந்த காரணத்தினா லேயே அண்ணன் தம்பி என்ற முறை பாராட்டி னர் அச்சோதரர். இதில் ஒரு வியப்பு என்னை எனில், ஏனைய மூவரும் இராமனை அண்ண னாக மட்டும் அல்லாமல், தந்தையாகவும், குரு வாகவும்,-ஏன்?-வணக்கத்துக்குரிய வழிபடு தெய்வ மாகவுமே மதித்தனர். அனைவருக்கும் ஒருசேரத் தண்ணளி செய்யும் தெய்வம் போல அப்பெரு மகனும் மூவரிடமும் ஒத்த அன்பு காட்டினான்.

இலக்குவன், தன்னைப் பொறுத்தவரை, அண்ணனை மிகுதியும் அண்ணனாகவே போற்றினான். பரதனோ, இராமனைத் தந்தையாகவே மதித்து வழிபட்டான். இதில் வேடிக்கை யாதெனில், இலக்குவன் பரதனுக்கு இளையவன். இக்கருத்தை நன்கு அறிந்த கம்பநாடன், பரதனை இராமன் தழுவியதாக வரும் இடங்களில் எல்லாம் தந்தை போலத் தழுவினான்’ என்றே கூறு