பக்கம்:தம்பியர் இருவர்.pdf/107

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 1 0 I

'எந்தையும் யாயும்எம் பிரானும் எம்முனும்

அந்தம்இல் பெருங்குணத்து இராமன் ஆதலால் வந்தனை அவன்கழல் வைத்தபோதுஅலால் சிங்தைவெங் கொடுந்துயர் தீர்க லாது!’ என்றான்.

(கம்பன்-21 59)

இராமன் பரதன் மாட்டுக் கொண்ட பேரன்பை முன்னர்க் கண்டோம். இப்பொழுது பரதன் இராமன் மேல் வைத்த அன்பைக் காண்கிறோம். இவை இரண்டில் எது பெரியது என்று ஆராய முடியாதபடி ஒன்றை ஒன்று விஞ்சி இருத்தல் கண்கூடு. கடிமணம் முடிந்து இராமன் மீளும்பொழுது இராமனுடைய தேரைப் பரதன் ஒட்டி வரக்காண்கிறோம். மணம் முடித்துவரும் அரசகுமாரனைத் தேரில் அமர்த்தி அதனைச் செலுத்தி வருகிறான். எனின் பரதனது தேர் ஒட்டும் திறமே அதற்குக் காரணமாதல் வேண்டும்.

இன்னுஞ்சில சந்தர்ப்பங்களில் பரதனுடைய செயலி விருந்து ஒன்றை ஊகிக்கவும் முடிகிறது தசரதனிடத்துப் பரதன் கொண்டிருந்த அன்பையும் மதிப்பையுங்காட்டிலும் அதிகமாக இராமன் மேல் அன்பும் மதிப்பும் கொண்டிருந் தான் என்று நினைய வேண்டியுளது. தசரதன் இறந்த பின்னர்த் துTதுவர் பரதனை அழைத்து வரக் கேகய நாடு சென்றனர்; பரதனையும் கண்டனர். ஆனால், முனிவன் ஆணைப்படி தசரதன் சாவைப்பற்றி அத்துதுவர் பரதனிடம் ஒன்றும் கூறவில்லை; எனவே, அவன் வினாக் கட்கு மெய்ம்மையல்லாத மறு மொழிகளைக் கூறு கின்றனர். பரதனது முதல் வினா, தீது இலன்கொல் திரு முடியான்? (2103) எபன்தாகும். அதற்கு அவர்கள், 'வலியன் என்று விடை இறுத்தார்கள். அதனையடுத்து விண்ா, அருமைத் தம்பியும் எம்பிரானும் நலமோ?’ என்ப தாகும். ஆம், என அவர்கள் கூறினவுடன் பரதன் அவர் கள் இருக்கும் திசை நோக்கி வணங்கினானாம்.