பக்கம்:தம்பியர் இருவர்.pdf/145

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் 1 39

அவனே கூறுகிறான், ஒரு வ ர் நஞ்சைக் கண்ட அளவிலோ, அன்றித் தொட்ட அளவிலோ அவரை அந்நஞ்சு கொன்றுவிடுவதில்லை. அதேபோல ஒருவர் தவறு செய்தவர் பிள்ளையாய்த் தோன்றின அளவில் அவரையும் தவறு செய்தவர் என்று உலகம் கூறிவிடுவ தில்லை. அதனாலேதான் தான் இறவாமல் உயிரை வைத் திருப்பதாகப் பரதனே கூறுகிறான்.

'உண்ணா கஞ்சம் கொல்கிலது என்னும் உரைஉண்டு

எனறு

எண்ணா கின்றேன் அன்றி இரேன்னன் உயிரோடே.”

(கம்பன்-2186)

இவ்வாறு தன்மேல் பழி வாராது என்று உறுதியாக நம்புகிற பரதன், ஏன் பத்து இடங்களில் பழியைப் பற்றி அரற்ற வேண்டும்? அதிலும் ஒர் உண்மை உளது. அவன் சான்றோன் என்பதற்கு அதுவே ஆதாரம். எவன் ஒருவன் தான் பழிக்குரிய செயலைச் செய்யாவிடினும் பிறர் ஒருவர் செய்த பழியைத் தான் செய்தது போல நினைந்து நாணம் அடைகிறானோ, அவனைச் சான்றோருட்சான்றோனாகக் கூறுவர் பெரியோர். பரதன் அத்தகையன்; ஆகவேதான் பிறர் செய்த பழிக்குத் தான் நாணுகிறான்.

'பிறர் பழியும் தம்பழிபோல் காணுவார் நானுக்கு

உறையதி என்னும் உலகு -

(திரு. 1915)

என்ற குறளுக்கு இலக்கியமாகிறான் பரதன். கைகேயியைத் தாய் என்று நினையாவிடினும் அவளைப் பகை என்றே அவன் கருதிக் கூறி உணர்ந்தாலும், அவள் செய்த பழிக்கு அவன் நாணுகிறான். நாணுடைமை என்ற பண்பாட்டிற்கு உறைபதியாய் விளங்கும் சால்புடையவனாகலின், இவ் வாறு அவள் செய்த பழியைத் தான் செய்ததாகவே கருதிக் கருதி நைந்து வருந்துகிறான்.