பக்கம்:தம்பியர் இருவர்.pdf/153

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அ. ச. ஞானசம்பந்தன் H 47

பிறகு அவனுக்குச் சினம் வரவில்லை என்பது வியப்பே. தான் கேகயத்தில் இருந்ததை அறிந்த கோசலை, தன்னை இதுவரை வளர்த்தவளாய கோசலை, தான் இத்தகைய செயலில் ஈடுபடுவானா என்பதை அறிந்திருந்தும் இவ்வாறு கேட்டாளே என்றுகூட அவன் சினம் கொள்ளவில்லை என்றால் அதுவியப்பே அல்லவா? இவ்வளவு தூரம் கோசலை ஐயப்படுகிறாள் என்பதை அறிந்தும் சிறிதும் சினங் கொள்ளாதது மட்டும் அன்றி, அவளிடம் வஞ்சினம் கூறும் அளவிற்கு அவன் மனம் பண்பட்டிருந்திருக்கிறது. தான் துய்மையானவன் என்பதை அவளுடைய தாயுள்ளம் அறியவேண்டும் என்பதற்காக அவன் எவ்வளவு பாடுபடு கிறான்! தன் உணர்ச்சி கொந்தளிக்கும் நிலையிலும் அதனை வெளிக்காட்டாமல் அவள் மனம் அமைதி அடைய இத்துணைத் துாரம் பேசுவானாகில், அவன் பண்பாட்டை என் என்று கூறுவது!

குறிக்கோளுடன் வாழும் ஒவ்வொரு மனிதனும் தன்னை அக்குறிக்கோளுக்குத் தியாகம் செய்யவேண்டும். எவ்வளவுக்கு எவ்வளவு தான்’ என்ற ஆணவம் குறிக் கோளில் அமிழ்த்தப்படுகிறதோ, அவ்வளவுக்கு அவ்வளவு ஒருவன் பெரியோனாய்த் திகழமுடியும். மனிதத் தன்மை யில் ஒரு பெரிய இடத்தைப் பெற்றுள்ள இந்த ஆணவம், மனிதன் தெய்வத் தன்மையடைய முயன்று அப்பாதையில் முன்னேறும் பொழுது அவனை விட்டுக் கொஞ்சங்கொஞ்ச மாகக் கழன்றுவிடுகிறது. அது கழலக் கழல அம்மனிதனிடம் தெய்விகத் தன்மை மெள்ள முகிழ்க்கிறது. வேறு வகை யாகக் கூறுமிடத்து ஆணவம் அற்றவிடத்தேதான் முழுத் தன்மை கிட்டுகிறது. இதனை,

'யான்எனது என்னும் செருக்குஅறுப்பான் வானோர்க்கு

உயர்ந்த உலகம் புகும்.’’ (திரு.-364) என்று வள்ளுவப்பெருந்தகையார் குறிக்கிறார். அவ்வாறா யின், ஆணவம் அற்றால்தான் முழுத்தன்மைகிட்ட அதன் பயனாகிய வீடு பேறும் கிட்டும் என்பதும் புெறப்படும்.