பக்கம்:தம்பியர் இருவர்.pdf/166

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

I & 5 தம்பியர் இருவர்

நேர்மையின் ஆணி’ என்று இராமனே பரதனைப் புகழ்ந் துள்ளான். அடுத்துள்ள நாணம் என்பது பழிபாவங்கட்கு அஞ்சுதல். தான் செய்யாவிடினும் பிறர் செய்த பழிக்குக் கூடப் பரதன் எவ்வளவு நாணமடைகிறான் என்பதைக் கண்டோம் ஆகவின், நாணுடைமை என்பதும் பரதனிடம் இயல்பாகவே அமைந்திருத்தலைக் காண்கிறோம். இவை இரண்டும் குடிப்பிறந்தார்கண் இயல்பாய் அமைந்திருக்கும் எனக் குறள் பேசுகிறது. பரதனிடம் இவை அமைந் துள்ளனவெனில் அவன் பிறந்த குடியும் (தாய் தந்தை பரும்) உயர்ந்ததாகவே இருத்தல் வேண்டும். எனவே, கைகேயி சிறந்தவள் என்று இராமன் முதல் அனைவரும் கருதப் பரதனுடைய பண்பாடு இடந்தருகிறது.

மேற்கூறிய அனைத்தையும் மனத்துட் கொண்டு பரதனை நோக்கினால், சால்பு’ என்று வள்ளுவர் குறித்த பண்பாட்டின் ஆணி வேராய் அவன் இலங்கக் காண் கிறோம். -

'அன்புநாண் ஒப்புரவு கண்ணோட்டம் வாய்மையொடு

ஐந்துசால்பு ஊன்றிய தூண்.” (திரு. 983) அன்பு, நாணம், ஒப்புரவு, கண்டோட்டம், வாய்மை என்ற ஐந்துந்தாம் சால்புடைமை' என்ற பாரத்தைத் தாங்கும் தூண்களாம். ஆம்; பரதனிடம் இவ்வைந்தும் குடிபுகுந்துள்ளன. பரதன் ஒருவன் இருக்கக் கூடுமானால், அதுவே இராமராச்சியம் எனப்படும். தான் என்ற பொருளை முற்றிலும் அழித்துக்கொண்டு, தொண்டு குறிக் கோள் என்பவற்றிற்கே வாழ்பவன், மனிதனாய்ப் பிறந் தாலும் தேவன் ஆகிறான். இவ்வுண்மையை உலகிற்குக் கர்ட்டவே பரதன் படைக்கப்பட்டான்.

亡口口

திரு. - திருக்குறள். - கம்பன் - சென்னை கம்பன் கழகப் பதிப்பு (1978)