பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/10

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிறப்புப் பாயிரம் பேராசிரியர் க. பெருமாள் முதல்வர் (ஓய்வு), அரசினர் கலைக் கல்லூரிகள், தமிழ்நாடு. பயண நூல்கள் நமக்களித்தார் யார்? 1. கல்லாரே மிக்குள்ள இக்காலம் தன்னில் கல்லாரை முன்னேற்றும் கருத்தாற்றல் உள்ள நல்லாரும் பாராட்ட, நன்றாக நாடி, நல்லுலகை உருவாக்கும் நல்லெண்ணத் தோடு சொல்லாலும் பொருளாலும் சுவையாலும் மிக்க தொகைநூலும் அறநூலும் ஆன்மிக நூலும் வல்லாரை உருவாக்கும் அறிவியல் நூலும் வகுத்தாய்ந்து பயன்நூல்கள் நமக்களித்தார் யாரே? அவர்தாம் அருங்கலைக்கோன் ரெட்டியார் 2. பேரன்பால் உலகனைத்தும் படைத்தழித்துக் காக்கும் பெருமாளின் அழகெல்லாம் பெருந்தமிழில் பாடி, ஆராத உள்ளுணர்வால் ஆழங்கால் பட்ட ஆழ்வார்கள் அருள்செய்த பிரபந்தம் தம்மைச் சீராக ஆராய்ந்து தெளிந்துணர்ந்த உண்மைத் திறமெல்லாம் மறவாமல் கட்டுரைகள் தீட்டி, ஊரெல்லாம் உலகெல்லாம் உணர்ந்தோ திவாழ உயிரனைய நன்னூல்கள் உவந்தெழுதித் தந்து தீராத உள்ளன்பால் தமிழணங்கைப் போற்றித் திகழ்கின்ற சுப்புசெட்டி அவரென்பேன் அம்மா!